ரஃபா நகரில் தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு!

Israel to halt Rafah

ரஃபா: காசாவின் ரஃபா நகரில் நடைபெற்று வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் கோரிக்கையை ஆதரிக்கும் நீதிமன்றம், ரஃபாவில் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஹமாஸ் வரவேற்றுள்ள நிலையில், இஸ்ரேல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த மாதம் தொடக்கத்தில் தெற்கு நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கியது. இந்த நிலையில், இஸ்ரேலை இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் பிரிட்டோரியா நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்த ஒரு வாரத்திற்குப் பிறகு, ரஃபாவில் இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்துமாறு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை தென்னாப்பிரிக்காவின் நீதிமன்றம் வரவேற்றுள்ளது.

ஆனால், இனப்படுகொலை தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று இஸ்ரேல் பலமுறை நிராகரித்துள்ளது. தற்பொழுது, பணயக்கைதிகளின் நிலை குறித்து மிகுந்த கவலை கொள்வதாக தெரிவித்த நீதிமன்றம், அவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தினர்.

மேலும், பாலஸ்தீன மக்களின் வாழ்வை ஒட்டுமொத்தமாகவோ பகுதியளவோ சிதைக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும், ராணுவ தாக்குதல்களையும் இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனல், சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகும் ரஃபா மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகள் சட்டப்பூர்வமானது என்றாலும், நடைமுறையில் உத்தரவுகளை அந்நீதிமன்றத்தால் செயல்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்