அமோக வரவேற்பு! வசூலில் பட்டையை கிளப்பிய பிடி சார்!
பிடி சார் வசூல் : ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான பிடி சார் படம் வெளியான முதல் நாளில் 1 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளரும். நடிகருமான ஹிப் ஹாப் ஆதி இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் என்பவர் இயக்கத்தில் ‘பிடி சார்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் காஷ்மீரா பர்தேஷி, அனிகா சுரேந்திரன், முனிஷ்காந்த், இளவரசு, பாண்டியராஜன், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியே இசையமைத்தும் இருக்கிறார். படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்த காலத்திற்கு தேவையான கருத்து ஒன்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருப்பதால் படம் மக்களுக்கு ரொம்பவே பிடித்து இருக்கிறது என்றே சொல்லலாம்.
படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இருக்கிறது எனவும், கண்டிப்பாக அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும் எனவும், மக்கள் தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள். படத்திற்கு மக்களுக்கு மத்தியில் இருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வருவதால் படத்திற்கு வசூல் ரீதியாகவும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், படம் வெளியான முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்து இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, பிடி சார் படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 1 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதாலும், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாலும் படத்தின் வசூல் இன்னுமே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.