உலகப் புகழ்பெற்ற மீம்ஸ்களின் அரசன்…’கபோசு’ மரணம்!
கபோசு : மீம்ஸ்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ‘கபோசு’ நாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.
உலகம் முழுவதும் மீம்ஸ் மூலம் பிரபலமான விஷயங்களில் கபோசு (Kabosu) நாயையும் முக்கிய இடத்தில் இருக்கும் என்றே கூறலாம். இந்த நாய் கொடுக்கும் ரியாக்ஸன் மனிதர்கள் போலவே காமெடியாக இருந்த காரணத்தால் உலகம் முழுவதும் பிரபலமானது. பலரும் இதனை மீம்ஸ்களின் ராஜா என்று கூட கூறுவார்கள்.
அந்த அளவுக்கு பல வகை ரியாக்சன் கொடுத்து நம்மளை மீம்ஸ் மூலம் சிரிக்க வைத்த கபோசு அனைவரையும் தூக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, இன்று காலை 7:50 மணியளவில் கபோசு உடல்நல குறைவால் உயிரிழந்தது. 17 வயதான கபோசு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயரமான செய்தியை கபோசுஅதன் உரிமையாளர் செய்தியை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து உரிமையாளர் தனது சமூக வலைதள பக்கத்தில் ” வழக்கம் போல நேற்று இரவு சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டு தூங்கும்போதே அவள் உலகத்தை விட்டு பிரிந்து சென்றால்.. உலகத்தில் அதிக அன்பை பெற்றுக்கொண்ட நாய் என்றால் இது தான். அதைப்போல, அவளைப் பெற்ற மகிழ்ச்சியான நபர் நான் தான்” எனவும் பதிவிட்டுள்ளார்.
கபோசுவின் மறைவுக்கு உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் தங்களுடடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மேலும், கபோசுவின் இறுதிசடங்கு வரும் ஞாயிற்றுக்கிழமை கோட்சு நோ மோரியில் உள்ள ஃப்ளவர் கௌரியில் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
2008ம் ஆண்டு ஜப்பானை சேர்ந்த ஒருவர் இந்த நாயை வளர்த்து வந்த நிலையில், இதனை வைத்து 2010-ஆம் ஆண்டு போட்டோ ஷூட் செய்து அதனை வெளியிட்டபோது பிரபலமாக தொடங்கியது. அதன்பிறகு, இந்த நாய் கொடுத்த ரியாக்ஸன் மூலம் மிகவும் வைரலாக 2013ம் ஆண்டில் இதனுடைய படத்தை அதன் லோகோவாகப் பயன்படுத்தி கிரிப்டோகரன்சியான Dogecoin உருவாக்கவும் தூண்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Today Kabosu, our community’s shared friend and inspiration, peacefully passed in the arms of her person. The impact this one dog has made across the world is immeasurable.
She was a being who knew only happiness and limitless love.
Please keep her spirit and her family in…
— Dogecoin (@dogecoin) May 24, 2024