இந்தியாவின் பயிற்சியாளராக ஆஸ்ரேலியா வீரரா? விளக்கம் கொடுத்த ஜெய் ஷா!

Jaisha

பிசிசிஐ : இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்ரேலியா முன்னாள் வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக வெளியான செய்தி உண்மை இல்லை என ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட் 50 ஓவர்கள் போட்டியில் இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வந்த நிலையில், வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு அவருடைய பயிற்சி காலம் முடிந்துவிடும். எனவே, அவருக்கு அடுத்ததாக எந்த வீரர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக யார் வருவார் என்ற கேள்வி எழும்பியது.

இதனையடுத்து, ஒரு செய்தியும் ரொம்பவே வைரலானது. அது என்னவென்றால், ராகுல் ட்ராவிட் பதவிக்காலம் முடிந்த பிறகு, இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய தலைமை பயிற்சியாளரை தேடி வருவதாகவும், இதற்காக ஆஸ்ரேலியா வீரர் ஒருவரை தேர்வு செய்யவும் அதற்காக சில வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் பரவியது.

இந்த தகவலுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றையும் வெளியீட்டு இருக்கிறார். இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது “நானும் , இந்திய அணியின் கிரிக்கெட் வாரியமோ, இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய எந்த ஒரு ஆஸ்ரேலியா வீரரையும் அணுகவில்லை. அப்படி அணுகியதாக பரவும் தகவல் எல்லாம் உண்மையில்லாத ஒன்று. எனவே, யாரும் இது போன்ற செய்தியை நம்பவேண்டாம்.

இந்திய அணிக்கு பயிற்சியாளரை தேர்வு செய்வது என்பது முக்கியமான வேளைகளில் ஒன்று. இந்திய அணியை பற்றி முழுவதுமாக தெரிந்த்து கொண்ட ஒருவரால் மட்டும் தான் பயிற்சியாளராக இருந்தால் சரியாக இருக்கும். எனவே, வதந்தி செய்திகளை நம்பவேண்டாம் இந்திய அணியை முன்னோக்கி எடுத்து செல்லக்கூடிய ஒரு அருமையான பயிற்சியாளரை  பிசிசிஐ தேர்ந்தெடுக்கும்” பிசிசிஐயின் அதிநவீன உள்ளகப் பயிற்சி வசதிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்