மக்களே உஷார் …! புதிய டெக்னிக்கில் சிம் கார்ட் மோசடி !
சிம் கார்ட் மோசடி : சிம் கார்ட் மூலமாக மோசடி நடைபெற்று வருவதால் அதிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொள்ளலாம் என்பது பற்றி இதில் பாப்போம்.
பல நூதன முறைகளில் பல மோசடிகள் நம்மை சுற்றிலும் நடைபெற்று வருகிறது. தற்போது, சிம் கார்ட் மூலமாக புதிய வர்த்தக ரீதியான மோசடி நடைபெற்று வருகிறது. இந்த மோசடியில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் பெயர், உங்களது ஆவணங்களை பயன்படுத்தி மோசடி கும்பல் மோசடி செய்து கொண்டு வரலாம். தற்போது அந்த மோசடியை பற்றி தெளிவாக பார்ப்போம்.
சிம் கார்ட் மோசடி
நீங்கள் புதிய சிம் கார்ட் வாங்கபோகும் நபராக இருந்தால், வாங்கும் போது மிக கவனமாக இருங்கள். நீங்கள் உங்களது ஆவணங்களை கொடுக்கும் பொழுது குறிப்பாக நீங்கள் கை ரேகை வைக்கும் பொழுது கவனமாக இருங்கள். உங்களை இரண்டு, மூன்று முறை கை ரேகை வைக்கும் படி சொன்னால் ஏன் என கேள்வி கேளுங்கள். ஏனென்றால் உங்கள் கை ரேகையை வைத்தே நீங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு மோசடிகள் நடைபெறுகிறது.
அதாவது நம்மை இரண்டு மூன்று முறை கை ரேகையை வைக்க சொல்லி விட்டு, நாம் கொடுத்த ஆவணங்களை வேறு ஒரு நகலை எடுத்து அதனை பயன்படுத்தி வேறு வேறு கம்பெனி சிம்களில் நமது பெயர்களால் போலியான சிம்கார்ட்டுகளை உருவாக்குவார்கள். அதன் பின் அதனை பயன்படுத்தி போலியான சமூகத்தளங்களையும் உருவாக்கி வேறு ஒருவரை குறிவைத்து நமது பெயரை உபயோகப்படுத்தி மோசடி செய்து கொண்டே இருப்பார்கள்.
மேலும், அந்த சிம் கார்ட் கடை உரிமையாளர் நமது ஆவணங்களை வேறொரு மோசடி கும்பலுக்கு கொடுக்கவும் வாய்ப்புகள் அதிகம். இதனால் சிம் கார்ட் வாங்கும் பொழுதும் ஆவணங்கள் கொடுக்கும் போதும் குறிப்பாக கைரேகையை இரண்டு மூன்று முறை எதாவது காரணம் சொல்லி வைக்க சொன்னாலோ சற்று உஷாராகவே இருங்கள். இதனால் அந்த மோசடி செய்யும் நபர் பிடிபட வாய்ப்புகள் குறைவு தான் அதற்கு பதிலாக உங்கள் பெயரை பயன்படுத்தி அந்த மோசடி கும்பல் மோசடி செய்திருந்தால் நீங்கள் தான் பிடிபடுவீர்கள்.
இதற்கான தீர்வு
நமது பெயரையும், நமது ஆவணங்களையும் பயன்படுத்தி வேறு ஏதேனும் போன் நம்பர் செயலில் உள்ளதா என கண்டறிய ஒரு அறிய வழியும் உள்ளது. அதை படிப்படியாக பார்க்கலாம்.
- முதலில் TAFCOP (Telecom Analytics for Fraud Management and Consumer Protection) https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/ என்ற அரசாங்கத்தின் தொலை தொடர்பு துரையின் அதிகாரப்பூர்வ இணையதளமாகும்.
- இதில் சென்று நீங்கள் பயன்படுத்தக்கொண்டிருக்கும் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும்.
- அதன் கீழ் இருக்கும் Captcha-வையும் கொடுத்தால் நமது மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி (OTP) வரும் அந்த ஓடிபியை கொடுக்க வேண்டும்.
- அப்போது ஒரு இணையதள பக்கமானது திறக்கும் அதில் நமது பெயரை பயன்படுத்தி யாராவது வேறொரு சிம்களை உபயோகித்து வருகின்றனர் என்றால் அதில் எத்தனை சிம் கார்டுகள் உபயோகித்து வருகின்றனர் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போல காட்டும். அப்படி காட்டினால் உங்கள் நம்பரை தவிர்த்து மீதம் உள்ள அந்த நம்பர்களை கிளிக் செய்து அதை உடனே நாட் மை நம்பர் (Not My Number) கொடுத்து கீழே காணும் ரிப்போர்ட் (Report) கொடுக்க வேண்டும்.
- அப்படி செய்தால் நமது பெயரில் உருவாகி இருக்கும் போலியான சிம் கார்டுகளை அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுத்து அழித்து விடுவார்கள்.
அதனால், இனி நாம் சிம் கார்ட் வாங்கும் பொழுது சற்று கவனமாக வாங்க வேண்டும். மேலும், தேவை இல்லாத இடங்களில் நமது ஆவணங்களை எக்காரணத்தை கொண்டும் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள்.