UAE கோல்டன் விசா என்றால் என்ன? முழு விவரம் இதோ!

golden visa

சென்னை :  ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் கோல்டன் விசா (Golden Visa) என்றால் என்ன எதற்காக இந்த விசா கொடுக்கப்படுகிறது என்பதற்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோல்டன் விசா என்றால் என்ன? 

ஐக்கிய அரபு அமீரகம் பிரபலங்கள் பலருக்கும் UAE (Golden Visa) கோல்டன் விசா வழங்கி நாம் பார்த்திருக்கிறோம். பலருக்கும் இந்த விசா எதற்காக வழங்கப்படுகிறது என்று தெரியாமல் இருக்கும். முதலில் கோல்டன் விசா என்றால் என்ன என்பதை பார்க்கலாம். கோல்டன் விசா என்றால் விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், முதலீட்டாளர்கள், ஆகிய துறைகளில் சிறப்புத் திறமைகள் வெளிக்காட்டுபவர்களுக்கு வழங்கப்படுவது தான்.

இந்த கோல்டன் விசாவை பெற்றுக்கொண்டால் அந்த நாட்டில் 5 லிருந்து 10 ஆண்டுகள் வரை தங்கிக்கொள்ளலாம். அதாவது, அமீரகத்தின் எந்த நிறுவனமோ அல்லது தனி நபர் உதவி இல்லாமல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமீரகத்தில் வசித்துக்கொள்ளலாம்.  அதுமட்டுமில்லாமல் 10 ஆண்டுகளுக்கு பிறகு கூட இன்னும் அங்கு இருக்க விருப்பம் இருக்கிறது என்றால் கூட மீண்டும் (Renew) புதுப்பித்துக்கொள்ளலாம்.

இந்த கோல்டன் விசாவை கடந்த 2019-ஆம் ஆண்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) வழங்கி வருகிறது. இந்த விசாவை பிரபலங்கள் மட்டும் தான் வாங்கமுடியுமா? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், நம்மளும் வாங்கலாம் அதற்கு நீங்கள் அங்கு  11 கோடி முதலீடு செய்தீர்கள் என்றால் 5 வருடத்திற்கான கோல்டன் விசா உங்களுக்கு வழங்கப்படும். அதுவே 20 கோடி முதலீடு செய்தீர்கள் என்றால் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கப்படும்.

கண்டிஷன் ? 

UAE கோல்டன் விசா பெறவேண்டும் என்றால் இத்தனை வயது இருக்கவேண்டும் என்று வயது வரம்பு எல்லாம் இல்லை. மாதம் 30,000 திர்ஹாமுக்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் கூட இதற்கு விண்ணப்பம் செய்து கொள்ளலாம். விசாவை விண்ணப்பிக்க முக்கியமாக பாஸ்போர்ட் இருக்கவேண்டும்.  நாடு, மொழி, இனம், என எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் திறமைகளை வெளிக்காட்டுபவர்களை கௌரவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது.

வாங்கிய பிரபலங்கள்? 

முதன் முதலாக இந்திய சினிமாவில் UAE கோல்டன் விசா வாங்கிய பிரபலம் என்றால் ஷாருக்கான் தான். தமிழ் சினிமாவில் முதலில் வாங்கியது நடிகை த்ரிஷா தான். இவர்களை போலவே, கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, சஞ்சய்தத், நஸ்ரியா, பஹத் பாசில்,  சானியா மிர்சா, போனி கபூர், அமலா பால், வருண் தவான், ரன்வீர் சிங்,மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான், மௌனி ராய், ஊர்வசி ரவுடேலா, சுனில் ஷெட்டி, நேஹா கக்கர், ஃபரா கான், சோனு சூட், டொவினோ தாமஸ் ஆகிய பிரபலங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்