மகாராஷ்டிரா : ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து.! 6 பேர் பலி.! 

Thane Chemical Factory Explosion

சென்னை: மகாராஷ்டிரா, தானே பகுதியில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே தானேவில் டோம்பிவாலி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் இன்று அடுத்தடுத்து பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலையில் தீ பற்றியது. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்து குறித்து பதிவிட்டுள்ள மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இந்த விபத்தில் இதுவரை 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். மேலும், தனியார் கெமிக்கல் ஆலையில் பாய்லர் வெடித்து சிதறிய சம்பவம் சோகமானது. இதுவரை 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  சம்பவம் நிகழ்ந்த 10 நிமிடங்களில் மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆலையில் ஏற்பட்டுளள தீயை அணைக்க 15 தீயணைப்பு இன்ஜின்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ரசாயன தொழிற்சாலை என்பதால் இங்கு ஏற்பட்டுள்ள தீயை அணைக்க குறைந்தது 4 மணி நேரம் ஆகும் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்