தமிழ்நாட்டில் பிக்சல் செல்போன் உற்பத்தி ஆலை! மு.க.ஸ்டாலினை சந்திக்கும் கூகுள் நிறுவனத்தினர்.!

mk stalin google pixel

சென்னை: கூகுள் நிறுவனம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்கவுள்ளது.

இந்திய அளவில் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ள நிலையில், பன்னாட்டு நிறுவனமான கூகுள், பிக்சல் ஸ்மாட்போன் உற்பத்தியை ஐபோன் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான் உடன் இணைந்து தமிழ்நாட்டில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுலகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், இது தொடர்பாக  விரைவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வரவுள்ளனர்.

இந்த நிறுவனத்தின் மூலம் சென்னைக்கு அருகில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை உருவாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்