வாடிவாசல் கதையை தெலுங்கு பக்கம் கொண்டு சென்ற வெற்றிமாறன்! கடுப்பாகி சூர்யா செஞ்ச விஷயம்?

Vettrimaran Suriya

சென்னை : வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் ராம்சரணிடம் சொன்னதால் சூர்யா கோபம் அடைந்து படத்தில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் தான் வாடிவாசல். இந்த படம் எப்போது தான் தொடங்கும் என்று கோலிவுட் சினிமாவே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருக்கிறது. சூர்யா வெற்றிமாறன் இருவருமே வேறு படங்களில் கமிட் ஆகி இருப்பதன் காரணமாகவே இன்னும் வாடிவாசல் படம் தொடங்கப்படாமல் இருப்பதாக தெரிகிறது.

இருப்பினும், வாடிவாசல் படம் குறித்த கிசு கிசுவும் அடிக்கடி வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல் சூர்யா ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். அப்படி என்ன தகவல் என்றால் சூர்யா வெற்றிமாறன் மீது கோபப்பட்டு வாடிவாசல் படத்தில் இருந்தே விலக முடிவு செய்துவிட்டாராம்.

அதற்கு முக்கிய காரணமே வாடிவாசல் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பதால் வெற்றிமாறன் அப்படியே சைலண்டாக இயக்குனர் வெற்றிமாறன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம்சரணை சந்தித்து வாடிவாசல் படத்தின் கதையை கூறினாராம். ஆனால், அந்த கதையை கேட்டுவிட்டு ராம்சரண் பிடிக்கவில்லை இந்த கதை இங்கு எடுத்தால் சரியாக இருக்காது என்று கூறி படத்தில் நடிக்கவே மறுத்துவிட்டாராம்.

இந்த தகவல் மெல்ல மெல்ல சூர்யா காதுக்கு பட்டதும் சூர்யா ரொம்பவே கோபம் அடைந்து படத்தில் இருந்து விலகலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். இந்த தகவலை பிரபல சினிமா தகவலை தெரிவிக்கும் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. இதனை பார்த்த சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.  உண்மையில் வாடிவாசல் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகினார் அவருக்கு பதில் வேறு ஹீரோ நடிக்கிறார்களா என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே தெரியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்