மணக்க மணக்க கல்யாண வீட்டு வத்தல் குழம்பு செய்வது எப்படி?

vathal kulambu

வத்தல் குழம்பு –கல்யாண வீட்டு முறையில் வத்தல் குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

  • சுண்டகாய் வத்தல்  =ஒரு கப்
  • புளி= எலுமிச்சை அளவு
  • வெல்லம் =அரை ஸ்பூன்

மசாலா அரைக்க தேவையானவை

  • துவரம் பருப்பு= இரண்டு ஸ்பூன்
  • கடலைப்பருப்பு =ஒரு ஸ்பூன்
  • வர மல்லி =ஒரு ஸ்பூன்
  • கடுகு =அரை ஸ்பூன்
  • வெந்தயம் கால் ஸ்பூன்
  • மிளகு மற்றும் சீரகம்= அரை ஸ்பூன்

தாளிக்க தேவையானவை

  • கடலை எண்ணெய் =நான்கு ஸ்பூன்
  • நல்லெண்ணெய்= 3 ஸ்பூன்
  • கடுகு =அரை ஸ்பூன்
  • வர மிளகாய்= இரண்டு
  • வெந்தயம்= கால் ஸ்பூன்
  • பூண்டு=5 பள்ளு
  • சின்ன வெங்காயம்= 20
  • தக்காளி =ஒன்று

மசாலா தூள்கள்

  • குழம்பு மிளகாய்த்தூள் =2ஸ்பூன்
  • மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன்
  • மஞ்சள் தூள்= கால் ஸ்பூன்

turkey berry

செய்முறை:

முதலில் துவரம் பருப்பு, கடலை  பருப்பு ,மல்லி ,கடுகு, வெந்தயம் ,மிளகு சீரகம் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து பவுடர் ஆக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி அதில் சுண்டைக்காய் வத்தலை லேசாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

onion ,garlic

இப்போது அதே எண்ணெயில் அரை ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் வெந்தயம் கருவேப்பிலை ,வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பிறகு அதிலே பூண்டை இடித்து சேர்த்து சின்ன வெங்காயத்தையும் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும் .வதங்கியதுடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி விடவும். பிறகு அதில் குழம்பு தூள் ,மிளகாய் தூள் ,மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து விட்டு புளி கரைசலையும் ஊற்ற வேண்டும் .

jaggery

இப்போது தேவையான அளவு உப்பு மற்றும் இரண்டு டம்ளர்  தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும், குழம்பு ஓரளவுக்கு வற்றியதும்  அதில் சுண்டைக்காய் மற்றும் வெல்லத்தை  சேர்க்கவும் .ஐந்து நிமிடம் அதை கொதிக்க வைத்து மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து  விடவும். இப்போது இந்த குழம்பு எண்ணெய்  பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து இறக்கினால் கமகமவென வத்தல் குழம்பு தயார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்