மருத்துவமனையில் நடிகர் ஷாருக்கான்.. திடீரென நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Shah Rukh Khan -Meets Fan

சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, அவர் “வெப்ப வாதத்தால்” பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து ஷாருக்கானின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ஜூஹி சாவ்லா, “ஷாருக்கிற்கு உடல்நிலை சரியில்லை, ஆனால் இப்பொது அவர் மிகவும் நன்றாக இருக்கிறார். அவர் விரைவில் குணமாகி, இனித் வார இறுதியில் நடைபெறவிருக்கும் போட்டியில் விளையாடும்போது கலந்து கொண்டு உற்சாகப்படுத்துவார்” என கூறினார்.

ஷாருக்கானின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் இணையத்தில் வைரலாக தொடங்கியதும், அவரது ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர். இதற்கிடையில், ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது, இது ஷாருக்கான் ரசிகர்ளிடம் இருந்து பாராட்டுக்களை பெற்றுள்ளது.

அது வேறொன்றும் இல்லை, மருத்துவமனை செல்லுவதற்கு முன், தன்னுடைய மாற்றுத் திறனாளி ரசிகரை சந்தித்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஷாருக்கான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும், தனது ரசிகரை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனை ஆவரது ரசிகர்கள் பெருமையுடன் புகழ்ந்து பதிவிட்டு வருகிறார்கள். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்