நரேன் கிட்ட கெஞ்சி பாத்துட்டோம் ..அவர் அந்த விஷயத்துக்கு ஒத்துக்கவே இல்லை! – ஆன்ட்ரே ரசல்

Andre Russell & Sunil Narine

சென்னை : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆன்ட்ரே ரசல் சுனில் நரேன் இந்த ஒரு விஷயத்துக்கு அவர் ஒத்துக்கவே இல்லை என கூறி இருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடரின் கொல்கத்தா அணியின் தொடக்க வீரராகவும், சுழற் பந்து வீச்சாளராகவும் சுனில் நரேன் கலக்கி வருகிறார். இவர் இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 11 போட்டிகளில் விளையாடி 461 ரன்கள் குவித்துள்ளார் மட்டுமின்றி 14 விக்கெட்டுகளையும் குவித்துள்ளார். இவர் இன்னும் 39 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினால் ஐபிஎல் வரலாற்றில் 2 முறை 500 ரன்களுடன், 15 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரராக சாதனை படைப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தொடக்கத்தில் விளையாடிய அந்த ஆக்ரோஷமான கிரிக்கெட் இந்த ஐபிஎல் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அவரை வருகிற டி20 உலகக்கோப்பை தொடருக்காக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட அவரிடம் கேட்டுள்ளனர்.ஆனால் அவர் அதனை மறுத்துள்ளார் என தகவல்கள் வெளிவந்தது. இதனை பற்றி அவருடன் கொல்கத்தா அணியில் விளையாடி வரும் சக வீரரான ஆன்ட்ரே ரசல் கூறி இருந்தார்.

அவர் இதனை பற்றி கூறுகையில், “சுனில் நரைன் சிறப்பாக விளையாடி வருவதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், கம்பீர் எங்கள் அணிக்குள் மென்டராக வந்த பிறகு சுனில் நரேனை துவக்கத்தில் விளையாட வைக்க பரிந்துரை செய்தார். இதற்க்கு முன்பெல்லாம் அவர் 8 அல்லது 9தாவது இடத்தில் வந்து விளையாடுவார். அப்படியான இடங்களில் அவர் வருவதால் எந்த பயனும் கிடையாது. மேலும், தனக்கு கிடைத்த வாய்ப்பை சுனில் நரைன் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்.

ஒரு முதன்மை பந்து வீச்சாளராக இருந்து கொண்டு 500 ரன்கள் அடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. மேலும், அவர் ஒரு பவுலராக 14 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். இது போல சிறப்பான ஆல் ரவுண்ட் திறமையை அவர் வெளிப்படுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

அதே நேரத்தில் சுனில் நரைனை டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். டி20 உலகக் கோப்பைக்கு வெஸ்ட் இண்டிஸ் அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே அவரை சம்மதிக்க வைக்க நான் ,மிகவும் முயற்சி செய்து பார்த்தேன்.

மேலும் என்னுடன் ரூதர்போர்ட்டும் அவரிடம் பேசிக் கொண்டே இருந்தோம். ஒரே ஒரு உலகக் கோப்பை மட்டும் விளையாடிவிட்டு ஓய்வு எடுக்கும்படி கேட்டோம். ஆனால் அவர் முடியாது என்று மறுத்துவிட்டார். மேலும் அவர் ஒரு முடிவை எடுத்து இருக்கிறார் அதை நான் மிகவும் மதிக்கிறேன்” என்று ஆன்ட்ரே ரசல் நேற்றைய போட்டியின் போது பேசி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்