சூப்பர் ஸ்டார் முட்டாள் தனமான முடிவு எடுக்கிறாரா..? எதிர்க்கட்சி தலைவர் கருத்து..!!

Default Image

சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடியை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சந்தித்த நிலையில் அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என்றும் கேரளாவில் பாஜகவை வலுப்படுத்துவார் என்றும், திருவனந்தபுரம் தொகுதியில் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றது.
Image result for mohan lal MODI
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறியபோது,’சூப்பர் ஸ்டாரும் நடிகருமான மோகன்லால் பா.ஜ.கவில் இணையும் முட்டாள்தனமான காரியத்தை செய்ய மாட்டார் என நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Image result for ரமேஷ் சென்னிதாலா

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: மோகன்லால் பல்வேறு மக்களாலும் ரசிக்கப்படும் ஒரு நடிகர். அவர் கேரள மக்களிடையே நல்ல பிரபலமானவர். சமூகத்தால் மதிக்கப்படுபவர். அவர் பா.ஜ.கவில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது போன்ற முட்டாள்தனமான தவற்றை செய்யமாட்டார் என நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதேபோல் பல அரசியல்வாதிகள் மோகன்லால் பாஜகவில் இணைவது குறித்து கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். இருப்பினும் பாஜகவில் மோகன்லால் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக கேரள அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

 

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்