பிசிசிஐக்கு உதவும் தோனி? ஃபிளெமிங்கை தலைமை பயிற்சியாளராக சம்மதிக்க வைக்க புதிய திட்டம்!

MSD, Stephen Fleming

சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் செயலாற்ற வைக்க தோனி பிசிசிஐ உதவுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பெற தொடங்கியதிலிருந்து பல ஜாம்பவங்களின் பெயர்கள் இதற்க்கு அடிப்பட தொடங்கியது. அதில் முக்கியமாக இந்திய முன்னாள் கிரிக்கெட்டரான கவுதம் கம்பிர், இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹேலா ஜெயவர்தனே, நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீபன் பிளெமிங் ஆகியோர்களின் பெயர்கள் அடிப்பட்டது.

அதிலும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு நீண்ட காலமாக தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ஸ்டீபன் பிளெமிங்கை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற வைக்க பிசிசிஐயே நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தியதாக சில தகவல்கள் உலாவியது. மேலும், அவர் அந்த பேச்சு வார்த்தைக்கு தயாராகவில்லை எனவும் அவருக்கு அதில் விருப்பம் இருப்பதாக தெரியவில்லை எனவும் தகவல்கள் வெளியானது.

தற்போது, பிளெமிங்கை இதற்கு சம்மதிக்க வைக்க பிசிசிஐ தோனியிடம் உதவி கேட்க போவதாக ஒரு தகவல்கள் பிசிசிஐ வட்டாரத்தில் வெளியாகி வருகிறது. இதை குறித்து பிசிசிஐ வட்டாரங்களின் மூலம் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு கிடைத்த தகவலின் படி, “பிளெமிங் இந்த பதவிக்கு இல்லை என கூறவில்லை எனவும் அவர் ஒப்பந்த காலத்தை குறித்து மட்டுமே கவலையை தெரிவித்துள்ளார் எனவும் கூறுகின்றனர். மேலும், தற்போது பயிற்சியாளராக இருக்கும் ராகுல் ட்ராவிட்டும் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டவில்லை.

அவரும் ஆரம்பத்தில் வற்புறுத்தப்பட்டார். அதே போல ப்ளெமிங்கையும் வற்புறுத்தினால்  அவரும் ஒத்துக்கொள்வார். அந்த வேலையைச் செய்ய எம்.எஸ்.தோனியை விட சிறந்தவர் யாரும் இல்லை. இதனால் தோனியிடம் உதவியை நாட பிசிசிஐ ஒரு திட்டம் தீட்டுகிறது என பபிசிசிஐ வட்டாரங்களில் பேச்சுகள் நிலவுகிறது. எது நடந்தாலும் தலைமை பயிற்சியாளரை பற்றி அதிகாரப்பூர்வ தகவல் பிசிசிஐயிடமிருந்து வெளியாகும் வரை காத்திருந்தே ஆக வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்