இப்ராஹிம் ரைசியின் மரணத்தை கொண்டாடும் ஒரு தரப்பு மக்கள்? என்ன காரணம்?
சென்னை : ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் ரைசியின் மரணத்துக்கு உலக நாடுகளின் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர். அதே நேரத்தில் ஈரானில் ஒரு பிரிவின மக்கள் ரைசியின் மரணத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஈரான் அதிபராக பதிவியிலிருந்து வந்த இப்ராஹிம் ரைசி, கடந்த ஞாயிற்றுகிழமை அன்று ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அவரின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. மேலும், ரைசியின் மறைவுக்கு ஈரான் அரசு 5 நாட்கள் துக்கம் அனுசரித்து வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் இவரது மறைவுக்கு ஒரு நாள் துக்கம் அனுசரித்து வருகின்றனர்.
இவரது மரணத்திற்கு அந்நாட்டு மக்களிலேயே ஒரு பிரிவினர் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். மேலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எம்பிக்கள் பலரும் ரைசியின் மரணம் சரியான தண்டனை தான் என்கின்றனர். நீதித்துறையில் அதிபர் ரைசி பணியாற்றிய காலங்களில் அவர் வழங்கிய உத்தரவுகளும் தீர்ப்புகளும்தான் இப்போது ரைசியின் மரணத்தை மக்கள் கொண்டுடவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
அதாவது விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஈராக்குக்கு எதிராக ஈரான் யுத்த காலத்தில் ஈராக் நாட்டின் அதிபராக பணியாற்றிய சதாம் உசேன் ஆயுதங்களை வழங்கி ஈரானிலேயே ஒரு ஆயுதக் குழுவை உருவாக்கி உள்ளார். இதனால் ஈராக் மற்றும் ஈராக் ஆயுத குழு ஆகிய இருமுனை தாக்குதல்களை ஈரான் ராணுவம் சந்திக்க நேர்ந்தது. இந்த போர் முடிவடைந்த பிறகு ஈராக் ஆயுதக் குழுவைச் சேர்ந்த 2,000 பேர் முதல் 5,000 பேர் வரை கைது ஈரான் நாட்டால் கைது செய்யப்பட்டனர்.
இதை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் நிலைமையை குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பல்வேறு கேள்விகளை எழுப்பிய போதும் இரான் நாட்டிலிருந்து எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமலே இருந்தனர். மேலும், 5,000 பேருக்கும் ஈரான் மரண தண்டனையை நிறைவேற்றி படுகொலை செய்தனர்.
இந்த மரண தண்டனைக்கு உத்தரவிட்டவரே அப்போது நீதித்துறையில் முக்கிய பதவியில் இருந்த இப்ராஹிம் ரைசி தான் என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். இதன் காரணமாக தான் அங்குள்ள ஒரு தரப்பு மக்கள் அவருக்கு கிடைத்த இந்த மரணம் சரியானது தான் என கூறி மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.