பேட்டி அளித்த ‘தல’ தோனி ..! மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!! என்ன பேசினார் தெரியுமா ?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். 

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சனிக்கிழமை அன்று பெங்களூரு அணியுடனான போட்டியில் தோல்வியடைந்து பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தொடர் என அவரது ரசிகர்களால் சமூக தளத்தில் பேசப்பட்டு வந்தது. ஆனால் அதைப்பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. 

மேலும், இந்த ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட தோனி போட்டி நடப்பதற்கு முன்னும், பின்னும் எந்த ஒரு பேட்டியும், எந்த ஒரு இடத்திலும் அவர் பேசவில்லை. அவர் எப்போது பேசுவார் என அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் துபாய் ஐ 103.8 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவருடன் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங்கும், சென்னையின் கேப்டனான ருத்துராஜ் கெய்க்வாடும் கலந்து கொண்டனர்.

அந்த பேட்டியில் அவர் சென்னை அணியை பற்றியும் பேசி இருந்தார். அவர் அந்த சேனலில் பேசும் பொழுது, “ஏற்ற தாழ்வுகளில் நீங்கள் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும், ஏனென்றால் நீங்கள் வெற்றி பெறும் போது  இதைத்தான் செய்வோம் என்று சொல்வது மிகவும் எளிதானது. ஆனால் கடினமான நேரங்களிலும்  நீங்கள் அப்படியே இருந்தால், அந்த நேரத்தில் தான் நீங்கள் மரியாதை பெறுவீர்கள். 

மேலும், சென்னை அணியுடனான எனது இணைப்பு என்பது வெறும் ஒரு மாதம், 2 மாதம் விளையாடி விட்டு வீடு திரும்புவது அல்ல. சென்னை அணி தான் என் பலம், சென்னை அணி தான் எனக்கு ஒரு எமோஷன்” , என்று துபாய் ஐ 103.8 என்ற யூடியூப் சேனலில் பேசிய போது ‘தல’ தோனி கூறி இருந்தார். 

அவர் அடுத்த தொடரில் விளையாடுவதை குறித்து அதிகாரப்பூர்வமாக அவர் தெரிவிக்கவில்லை என்றாலும்  சென்னை அணியின் ரசிகர்கள் அவர் அடுத்த தொடரிலும் கண்டிப்பாக விளையாடுவார் என நம்பிக்கையுடன் சமூக தளத்தில் கூறி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்