5-ம் கட்ட மக்களவை தேர்தல் !! மாலை 5 மணி வரையில் 61.90% வாக்கு பதிவு !

5th Phase @ 5pm

சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

5-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று (மே 20) நடைபெற்று வரும் நிலையில் உத்திர பிரதேசம் , பீகார், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், லடாக், மகாராஷ்டிரா, ஒடிசா , மேற்கு வங்கம் என மொத்தமாக ஆகிய மாநிலங்களில் தொகுதிகளில் தற்போது இந்த தேர்தலானது நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தமாக 543 தொகுதிகளில் இதுவரை 379 தொகுதிகளுக்குமான தேர்தலானது 4 கட்டங்களாக நிறைவு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்று வரும் இந்த 5-ம் கட்டமாக காலை 7 மணி அளவில் தொடங்கப்பட்ட இந்த தேர்தலில் வாக்காள பெருமக்கள் , அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் பலரும் அவர்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி, 10.28 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், பிற்பகல் 3 மணி அளவில் 47.53 % வாக்குகள் பதிவாகி இருந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை தொடர்ந்து தற்போது வெளியான தகவலின்படி நடைபெற்று வரும் இந்த 5-ம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி வரையளவில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தற்போது, 8 மாநிலங்களில் பதிவான வாக்குகளின் சதவீதங்களை பற்றி பார்க்கலாம்.

  • பீகார்- 52.35%
  • ஜம்மு & காஷ்மீர்- 54.21%
  • ஜார்கண்ட்- 61.90%
  • லடாக்-67.15%
  • மகாராஷ்டிரா- 48.66%
  • ஒடிசா- 60.55%
  • உத்தரப் பிரதேசம்-55.80
  • மேற்கு வங்காளம்- 73.00%

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்