இதுதான் சாவர்க்கரின் 5 பெருமைகள்..! அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் விமர்சனம்.!

Tamilnadu Minister Mano Thangaraj - VD Savarkar

சென்னை: சாவர்க்கரின் 5 பெருமைகள் என தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில், மும்பை சென்று அங்கு அண்ணல் அம்பேத்கார் நினைவிடம், சாவர்க்கர் நினைவிடம் ஆகிய இடங்களுக்கு சென்று வணங்கினர். அதில், சாவர்க்கர் நினைவிடத்திற்கு சென்றுவிட்டு அவர் பேசுகையில், சாவர்க்கர் துணிச்சலுக்கும், நாட்டின் மீது அசையாத அர்ப்பணிப்புக்கும் அடையாளமாக இருந்தார் என்றும்,  அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், அறிஞர் மற்றும் சிந்தனையாளராகவும் இருந்தார் என்றும், அவர்கள் கனவு கண்ட இந்தியாவை உருவாக்காமல் விடமாட்டோம் என்று குறிப்பிட்ட பிரதமர், சாவர்க்கர் பற்றி 5 விஷயங்களை I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் பேச முடியுமா என கேட்டிருந்தார்.

இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் விமர்சனங்களை பதிவிட்டு வரும் வேளையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சாவர்க்கரின் 5 பெருமைகள் என ஓர் பட்டியல் ஒன்றை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கம் வாயிலாக கூறியுள்ளார். அதில்,

1. அந்தமான் சிறையில் அடைபட்டபோது நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரிடம் நான் உங்கள் சேவகன் என்று கூறி மன்னிப்புக் கடிதம் எழுதி விடுதலை பெற்றவர். ஆங்கிலேய அரசிடமிருந்து ஓய்வூதியம் பெற்றவர்.

2.மத வெறுப்பையும், ஆரிய இனவெறியையும் மக்கள் மத்தியில் பரப்புவதையே கொள்கையாக கொண்டவர்.

3.அந்தமான் சிறையில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒரே இலட்சியத்திற்காக அடைபட்டிருந்தபோது இஸ்லாமியர்களின் தொழுகை நேரத்தில் சங்கநாதம் எழுப்புங்கள் என்று அப்பாவி இந்துக்களை தூண்டிவிட்டு வெறுப்புணர்வை விதைத்தவர்.

4.யாரெல்லாம் இந்து மதத்தைச் சாராதவர்களோ அவர்களெல்லாம் இந்தியர்களும் அல்ல எனவும், இந்தியாவிலேயே பிறந்து, இங்கேயே வாழ்ந்து வரும் மாற்று மதத்தவர்களை பிறர் (Others) என்று கூசாமல் சொன்னவர்.

5.காந்தி ‘Power to people’ என்று சொன்னார். ஆனால் சாவர்க்கர் அதற்கு நேர்மாறாக `Power over people’ என்று சொன்னார். அதாவது மக்களின் மீது அரசு மேலாதிக்கம் செலுத்துவதை ஆதரித்தவர்

என்று பட்டியலிட்டு, பின்னர் சாவர்க்கரின் மன்னிப்பு கடிதத்தை தயவு செய்து படியுங்கள் எனவும் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் மனோ தங்கராஜ் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்