‘நான் அவருக்கு பந்து வீச விரும்ப மாட்டேன் ..’ ! மகிழ்ச்சியில் பேசிய பேட் கம்மின்ஸ்!

Pat Cummins

சென்னை : நேற்று நடைபெற்ற பகல் ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்ற பிறகு கேப்டன் பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சியில் பேசி இருந்தார்.

ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளது, இந்த லீக் போட்டியின் நேற்றைய பகல் போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்கத்தில் பேட்டிங்கை சிறப்பாக அமைத்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ஹைதராபாத் அணியின் பவுலர்கள் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.

இறுதியில் 20 ஓவருக்கு 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியில் குறிப்பாக ப்ரப்சிம்ரன் 45 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணியில் நடராஜன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். அதன் பிறகு இலக்கை எட்டுவதற்கு களமிறங்கிய ஹைதரபாத் அணி முதல் ஓவரில் முதல் பந்தில் தங்களது முதல் விக்கெட்டான ஹெட்டை இழந்தனர். அதன் பிறகு அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா, பஞ்சாப் பவுலர்கள் வீசிய பந்தை 4 பக்கங்களும் பவுண்டரிகள் விளாசினார்.

மேற்கொண்டு களமிறங்கிய ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் ஓரிரு பவுண்டரிகள் சிக்ஸர்கள் என சிறப்பாக அதிரடி காட்டிவிட்டு அவுட்டாக இறுதியில் 19.1 ஓவருக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். இந்தப்போட்டி முடிந்த பிறகு ஹைதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் வெற்றியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார்.

அவர் பேசிய போது, “இந்த வெற்றி மிகவும் அருமையாக இருக்கிறது. 7 போட்டிகளில் 6 போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, நாங்கள் நன்றாக விளையாடியுள்ளோம். நான் எதிரணியில் இருந்தால் அபிஷேக் ஷர்மாவுக்கு பந்து வீச விரும்ப மாட்டேன் மற்றும் நான் அதில் மகிழ்ச்சியடைவும் மாட்டேன் . அவர் ஸ்பின்னர் மற்றும் வேக பந்து வீச்சாளர்களையும் அதிரடியாக அடிக்கிறார். அதே போல நிதிஷ் குமாரும் ஒரு கிளாஸ்ஸான பிளேயர்.

மேலும் அவர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் சரியான பொருத்தமாக இருக்கிறார். பிளே ஆஃப்களுக்குச் செல்வது மிகவும் திருப்திகரமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. மேலும், எங்கள் அணியில் நான் உட்பட சில வீரர்கள் இறுதி போட்டியில் விளையாடுவோமா என்று தெரியவில்லை அது இன்னும் சில நேரங்களில் தெரிந்து விடும்”, என்று போட்டி முடிந்த பிறகு வெற்றியின் காரணத்தை பற்றி மகிழ்ச்சியாக பேசி இருந்தார் பேட் கம்மின்ஸ்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்