ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி !! ராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை !!

RRvKKR

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது.

நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளில் கடைசி போட்டியான 70-வது போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு கௌவ்காட்டியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் தொடங்குகிறது.

இந்த தொடரில் ஏற்கனவே இந்த இரு அணிகளும் பிளே ஆஃப்பில் தகுதி பெற்றுள்ளது. மேலும் இந்த இரு அணிகளிளும் வலுவான வீரர்கள் இருப்பதால் இந்த போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் இந்த இரு அணிகளும் கடைசியாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட பொழுது ராஜஸ்தான் அணி ஒரு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துளளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் மொத்தமாக29 போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதில் 14 போட்டிகளை ராஜஸ்தான் அணியும், 14 போட்டிகளில் கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாகவே நேருக்கு நேரில் முந்துவதற்கு இரண்டு அணிகளும் முற்படுவதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள்

ராஜஸ்தான் அணி

யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரல், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், தனுஷ் கோட்டியான்,

கொல்கத்தா அணி

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிங்கு சிங், நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்