ஆறுதல் வெற்றியை பெறுமா பஞ்சாப் அணி ? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை !!

SRHvPBKS

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது.

நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று மதியம் 3.30 அணிக்கு ஹைதராபத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வேதச மைதானத்தில் சன் ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகிறது.

ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்காக 4 அணிகள் முன்னேறி உள்ள நிலையில் தற்போது இந்த போட்டி எந்த ஒரு தாக்கத்தையும் இந்த ஐபிஎல் தொடரில் விளைவிக்க போவிதில்லை என்பதால் இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்ப்பு என்பது குறைத்துள்ளது என கூறலாம்.

இந்த தொடரில் இந்த இரு அணிகளும் கடைசியாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட பொழுது ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் அந்த போட்டியில் த்ரில் வெற்றியை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் மொத்தமாக 22 போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதில் 15 போட்டிகளை ஹைதரபாத் அணியும், 7 போட்டிகளில் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால் இந்த போட்டியை ஹைதராபாத் அணி வெற்றி பெறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள்

ஹைதராபாத் அணி

அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜெய்தேவ் உனட்கட், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்

பஞ்சாப் அணி

பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோவ், ரிலீ ரோசோவ், ஷஷாங்க் சிங், ஜிதேஷ் சர்மா, ரிஷி தவான் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), சாம் குர்ரன்(சி), ஹர்பிரீத் ப்ரார், ஹர்ஷல் படேல், நாதன் எல்லிஸ், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்