5ஆம் கட்ட மக்களவை தேர்தல்… 8 மாநிலங்கள், 49 தொகுதிகள்…

5th Phase Election

சென்னை: மக்களவை தேர்தல் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.

நாட்டில் உள்ள 543 தொகுதிகளுக்குமான நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 4 கட்ட வாக்குபதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரை 379 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு நாளை (மே 20), 25, ஜூன் 1ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

நாளை (மே 20), 5ஆம் கட்ட தேர்தலானது 8 மாநிலங்களில் மொத்தம் 49 தொகுதிகளில் மட்டும் நடைபெறுகிறது. வழக்கம்போல, நாளை காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவுபெறும். இதில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

உத்திர பிரதேசம் ரேபரேலியில் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, லக்னோவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிரா மும்பை வடக்கு தொகுதியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் இந்த தேர்தலில் களம் காணும் நட்சத்திர வேட்பாளர்கள் ஆவார்.

8 மாநிலங்கள்… 49 தொகுதிகள்…

உத்திர பிரதேசம் – 14 தொகுதிகள். மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இதுவரை 39 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது.

மஹாராஷ்டிரா – 13 தொகுதிகள். மொத்தமுள்ள 48 தொகுதிகளில் இதுவரை 35 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது.

மேற்கு வங்கம் – 7 தொகுதிகள்.மொத்தமுள்ள 42 தொகுதிகளில் இதுவரை 18 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது.

பீகார் – 5 தொகுதிகள். மொத்தமுள்ள 40 தொகுதிகளில் இதுவரை 19 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது.

ஒடிசா – 5 தொகுதிகள். மொத்தமுள்ள 21 தொகுதிகளில் இதுவரை 4 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது.

ஜார்கண்ட் – 3 தொகுதிகள். மொத்தமுள்ள 14 தொகுதிகளில் இதுவரை 4 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் – 1 தொகுதி. மொத்தமுள்ள 5 தொகுதிகளில் இதுவரை 4 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது.

லடாக் – ஒரே ஒரு தொகுதிக்கும் நாளை (மே 20) தேர்தல் நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்