இது ரொம்ப முக்கியம் கண்ணா! பயோபிக் படத்திற்கு இளையராஜா போட்ட முக்கிய கண்டிஷன்?
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா தனது பயோபிக் படத்திற்கு கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை கேப்டன் மில்லர், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஷ் வரன் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் இளையராஜாவின் கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். படத்தை கனெக்ட் மீடியா – பிகே பிரைம் ப்ராட் – மெர்குரி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இந்த படத்திற்கான படப்பிடிப்பும் விரைவில் தொங்கப்படவுள்ள நிலையில், படம் எப்படி வரப்போகிறது என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த நிலையில், படம் தொடங்குவதற்கு முன்பே இயக்குனருக்கும் படக்குழுவினருக்கும் இளையராஜா பெரிய கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம்.
அது என்ன கண்டிஷன் என்றால் இந்த பயோபிக் படத்தில் வரும் பாடல்கள் மற்றும் பின்னணி இசை எல்லாம் தான் இதற்கு முன்பு இசையமைத்தவையில் இருந்து மட்டும் தான் பயன்படுத்தவேண்டும் என்று கூறிவிட்டாராம். குறிப்பாக படத்தில் அன்னக்கிளி படத்திற்கு இசையமைப்பது போல காட்சி வந்தால் அதே பாடலை தான் இந்த பயோபிக் படத்திலும் உபயோகம் செய்யவேண்டும் என்று கூறிவிட்டாராம்.
பின்னணி இசையை பொறுத்தவரையிலும் அப்படி தானம் சோகமான காட்சிகள் எல்லாம் வந்தது என்றால் இதற்கு முன்பு அவர் இசையமைத்த சோகமான பின்னணி இசையை பயன்படுத்தவேண்டுமாம். அப்படி இல்லை புதிதாக இந்த காட்சிக்கு பின்னணி இசைவேண்டும் என்றால் அதை தானே அமைத்து கொடுக்கிறேன் என்று ரொம்பவே கண்டிஷனாக சொல்லிவிட்டாராம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. மேலும், விரைவில் இளையராஜா பயோபிக் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் பற்றிய அறிவிப்பும் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.