நெய்யை யாரெல்லாம் எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிஞ்சுக்கோங்க.!

ghee

Ghee-நெய் சாப்பிடும் முறை மற்றும் யாரெல்லாம் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

நெய் நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்தா ஆயுர்வேதத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது . நெய்யை இனிப்பு பண்டங்களில் சேர்ப்பது அதன் மணத்திற்காக மட்டுமல்ல ஆரோக்கியமான குணத்திற்காகவும் தான்.

நெய்யில் உள்ள சத்துக்கள்:

நெய்யில் கொழுப்புச்சத்து 14 கிராம் உள்ளது .விட்டமின் ஏ, இ, கே போன்ற சத்துக்களும் உள்ளது. மீனில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் இருப்பது போல் நெய்யிலும் ஒமேகா 3 அமிலம் உள்ளது என சமீபத்தில் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நெய்யை சாப்பிடும் முறை:

நெய்யை எக்காரணத்தைக் கொண்டும் உருக்காமல் சாப்பிடக்கூடாது. நெய் சாப்பிட்டுவிட்டு வெதுவெதுப்பான தண்ணீர் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். அல்லது சூடான சாதம், சாம்பார், தோசை போன்றவற்றில் கலந்தும் சாப்பிடலாம்.

வெறும் வயிற்றில் காலையில் ஒரு ஸ்பூன் நெய்  எடுத்து கொண்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று சமீப காலமாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் இது அனைவருக்குமே பொருந்தும் என்று கூறி விட முடியாது. அவரவர் உடல் நிலைக்கு ஏற்றார் போல் சாப்பிடுவது தான் சிறந்தது.

நெய்யை யார் எப்படி எடுத்துக் கொள்வது?

நரம்புத் தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள், மூக்கடைப்பு, ரத்தக்குழாய் பிரச்சனை உள்ளவர்கள் ,ஆஸ்துமா, நுரையீரல் போன்ற பிரச்சினை உள்ளவர்கள்  மதிய உணவுகளில் எடுத்துக் கொள்ளலாம்.

சொரியாசிஸ் மற்றும் ரத்தம் சுத்தமாக இல்லாதவர்கள் உணவு சாப்பிட்டபின் ஒரு ஸ்பூன் நெய் உருக்கி எடுத்துக்கொண்டு பிறகு வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும். மேலும் சொரியாசிஸ் உள்ளவர்கள் நெய்யை தேய்த்து குளித்து வர விரைவில் குணமாகும்.

அடிவயிற்றில் தொப்பை இருப்பவர்கள், நீர்க்கட்டி பிரச்சனை உள்ளவர்கள் வாயு தொந்தரவு இருப்பவர்கள் காலை வெறும் வயிற்றில் நெய்யை எடுத்துக் கொள்ளலாம் .இதனால் தோல் மினுமினுப்பு ஏற்படும் .உடல் எடை குறையும். சீரான மாதவிலக்கு ஏற்படும். மேலும் வாய்வு  தொல்லை இருப்பவர்கள் நெய்யை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கல்லீரல் , கிட்னி பிரச்சனை ,பித்தப்பையில் கல் இருப்பவர்கள் உணவு எடுத்துக்கொள்ளும் போது கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் .அதாவது சிறிது உணவு பிறகு நெய் மற்றும் சுடு தண்ணீர் அதன் பிறகு சிறிது உணவு இதுபோல்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

நெய்யை தினமும் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் வீதம் எடுத்துக்கொள்வது நல்லது .அதற்கு மேல் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு எடுத்துக் கொள்ளும் போது வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை  சமநிலை படுத்துகிறது. குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டுள்ளது.

குறைந்த கிளைசிமிக் உள்ளதால் நீரிழிவு நோயாளிகளும் நெய்யை எடுத்துக் கொள்ளலாம். மன பயம், பதட்டம் போன்றவற்றை தடுக்கிறது. மூளைக்கு சுறுசுறுப்பையும் புத்துணர்ச்சியையும் தருகிறது .சருமத்தை பளபளப்பாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது .

உடல் மெலிந்த குழந்தைகளுக்கு தினமும் மதிய உணவில் நெய்யை கொடுத்து வரலாம். ஒரு வயது குழந்தையிலிருந்து நெய்யை சேர்த்துக் கொள்ளலாம். ஒரு தோசையில் நெய் ஊற்றி சாப்பிட்டால் அது இரண்டு தோசைக்கு சமம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு உடல் எடை கூடும். சருமம் மினுமினுப்பாக இருக்கும்.

தீ காயங்கள் மீது நெய்யை தடவி வர எரிச்சல் குணமாகும். மேலும் பித்த வெடிப்பு, உதடு வெடிப்புகளில் தடவி வர விரைவில் புண்கள் ஆறும். 30 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாயம் நெய்யை எடுத்துக் கொள்ள வேண்டும் .

ஏனென்றால் இந்த வயதை கடந்த பிறகு தான் தோல் சுருக்கம் ஏற்பட துவங்கிவிடும் .நெய்யை எடுத்துக் கொள்ளும் போது முதுமையை தள்ளிப் போட முடியும். மேலும் மூட்டுகளுக்கு நல்ல வலு கொடுக்கிறது.

தவிர்க்க வேண்டியவர்கள்:

வாந்தி, வயிற்றுப்போக்கு ,மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தவிர்க்கவும். மேலும் இதய நோய் உள்ளவர்கள், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் அளவாகவும் முறையாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கொழுப்பு என்றாலே  ஒரு வில்லனை பார்ப்பது போல் நாம் ஒதுக்கி விடுகிறோம். ஆனால் நம் உடலுக்கு கொழுப்பு சத்து  மிகவும் அவசியமானது. அதிலும் நல்ல கொழுப்பு தான் தேவை .இது நெயில் தாராளமாகவே உள்ளது.

எனவே நல்ல கொழுப்பு உள்ள நெய்யை அதுவும் சுத்தமான பசும் நெய்யை தான் பயன்படுத்த வேண்டும். அதில் மட்டுமே மருத்துவ நன்மைகள்  உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்