தொடர் மழை…நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!
சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் கொடுத்தும் இருக்கிறது. இந்த சூழலில், தொடர் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக நெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தற்காலிகமாகதடை விதித்துள்ளது. ஏற்கனவே, நேற்று மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்ததன் காரணமாக தென்காசி பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளம் ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகள் பலரும் தென்காசி பழைய குற்றால அருவிவியில் குளித்து கொண்டு இருந்த சூழலில், திடீரென வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக மக்கள் பலரும் அலறி அடித்து ஓடினார்கள். இந்த வெள்ளப்பெருக்கில் திருநெல்வேலியைச் சேர்ந்த சிறுவன் அஸ்வின் (17) என்பவர் உயரிழந்தார்.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலை பகுதிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், தென்காசி பழைய குற்றால அருவிவி பகுதிகளில் 5 நாட்கள் மழை தொடர வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.