எப்பா .. இதுலாம் செஞ்சாதான் ஆர்சிபி பிளே ஆஃப் வர முடியுமா ? குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் !

RCBvCSK

சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில் போட்டியிட உள்ளனர்.

ஐபிஎல் தொடர்நது முடிவடையும் தருணத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான சமயமும் நெருங்கும் நிலையில் ஏற்கனவே 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் 4வது அணியாக சென்னை அணியா ? அல்லது பெங்களூரு அணியா ? என்ற கேள்வியில் ஒட்டு மொத்த ஐபிஎல் ரசிகர்களும் இருந்து வருகின்றனர். இது நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் பெங்களூரு, சென்னை போட்டியில் தெரிந்து விடும்.

இந்த போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கு போகலாமா என்று கேட்டால் வெறும் ஒரு சிறிய வெற்றியை வைத்து கொண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு போக முடியாது. சென்னை எதிர்த்து நாளை விளையாடும் பெங்களூரூ அணி ஒரு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தே ஆக வேண்டும். அதாவது, புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 13 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள் 6 தோல்விகளை பெற்று 4-வது இடத்தில் இருந்து வருகிறது.

அதே நேரம் பெங்களூரு அணி 13 போட்டிகளில் விளையாடி அதில் 6 வெற்றிகள் 7 தோல்விகளை பெற்று 6-வது இடத்தில் இருந்து வருகின்றனர். இந்த இரு அணிகளுக்கும் இது தான் லீக் தொடரின் கடைசி போட்டியாகும். சென்னை அணி 6 தோல்விகளை பெற்றிருந்தாலும் ரன் ரேட்டை பார்க்கும் போது +0.528 என்ற ஒரு சிறப்பான ரன் ரேட்டில் உள்ளனர். அதே நேரம் ஆர்சிபி அணி +0.387 என்ற ரன் ரேட்டை வைத்துருந்தாலும் 12 புள்ளிகள் மட்டுமே எடுத்துள்ளனர்.

இதனால் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 18 ஓவர்களுக்குள்ளோ சேசிங் செய்து வெற்றி அடைந்தால் மட்டும் சென்னை அணியின் ரன் ரேட்டை தாண்டி போக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்,இந்த போட்டிக்கு ஏன் இத்தனை எதிர்ப்பார்ப்பு என்றால் ஆதற்கு மிக முக்கிய காரணம் ஆர்சிபி அணியின் தொடர் 5 வெற்றிகள் தான். ஆர்சிபி அணி ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

அதே நேரம் அடுத்த பாதியில் பெங்களூரு தொடர்ந்து 5 வெற்றிகளை அதுவும் பெரிய பெரிய வெற்றிகளை பதிவு செய்து தற்போது புள்ளிப்பட்டியலில் 6-வது அணியாக முன்னேறி உள்ளனர். அதனால் ஆர்சிபி அணி இந்த போட்டியை கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என ஆர்சிஅணி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதெல்லாம் ஒரு முனையில் இருக்க மே-18 அன்று அதாவது நாளை பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதுகின்றனர். ஆனால் பெங்களூரு அணிக்கு பிரச்சனை என்னவென்றால் நாளை பெங்களுருவில் ஆரஞ்சு அலெர்ட் கொடுத்திருக்கிறார்கள். இதனால் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒரு வேளை இந்த போட்டியானது மழையால் நடைபெறாமல் போனால் புள்ளிகளின் அடிப்படையில் சென்னை அணி பிளேஆஃப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இதனால் சென்னை அணி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்