மிஸ் பண்ணிடாதீங்க..! கோடையில் கோலாகலமாக தொடங்கிய 61வது மலர் கண்காட்சி..!

Kodaikanal flower Show

சென்னை :  கொடைக்கானலில் 61-வது கோடை திருவிழாவானது மலர் கண்காட்சிகளுடன் கோலாகலமாக இன்று தொடங்கியுள்ளது.

மலைகளின் இளவரசி என்று பெருமைக்குரிய இடம் தான் கொடைக்கானல், தமிழகத்தில் கோடை காலம் வந்தாலே அந்த வெப்பத்தை தாக்கத்தை தனிப்பதற்கு கொடைக்கானல், ஊட்டி என்று சென்று வருவோம். அதிலும் கொடைக்கானலில், கோடை காலத்தில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் வருடம் தோறும் இந்த மே மாதம் கோடை திருவிழாவானது மலர் கண்காட்சிகளுடன் தொடங்கிவிடும்.

தற்போது, இந்த ஆண்டும் இன்றைய நாளில் மலர் கண்காட்சிகளுடன் கோடை திருவிழாவானது கோலாகலமாக தொடங்கியுள்ளது. மேலும், இந்த ஆண்டு தொடங்கியுள்ள 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழாவானது இன்று காலை 8 மணி அளவில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தொடங்கி உள்ளது. இதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த கோடை திருவிழாவில் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் விதவிதமான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

இன்று தொடங்கிய இந்த மலர் கண்காட்சியில் கலந்து கொண்ட சுற்றுலா பண்பாட்டு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளரான மணிவாசகன் கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். அவருடன் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளரான அபூர்வா அவர்கள் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

இவர்களுடன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆணையர் சமயமூர்த்தி, தோட்டக்கலை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் இந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். இன்று தொடங்கியுள்ள மலர் கண்காட்சியானது தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற உள்ளது. மேலும், இந்த கோடை விழாவானது வருகிற மே-2 ம் தேதி வரை நடைபெறுகிறது.

மேலும், இந்த பிரையண்ட் பூங்காவில் அமைக்கப்பட்ட மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களால் உருவாக்கப்பட்ட மயில், டைனோசர் ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பிற்க்காக சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2 ஆண்டுகளுக்குபிறகு கோடைவிழா நடைபெறுவதால் கொடைக்கானல் நகரமே விழாக்கோலம் போல காட்சியளித்து வருகிறது. அதே போல கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்