பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க விடுவோம்.! அமித்ஷா எச்சரிக்கை.!

Union minister Amit shah

சென்னை: பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க விடுவோம் என மத்திய அமைச்சர் அமித்ஷா பீகார் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

பீகார் மாநிலம் மதுபானியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா இன்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், சீதையின் தேசமான இங்கு பசுவதை செய்வதை ஏற்க முடியாது என்றும், மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க விடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

சீதாதேவி பிறந்த ஊரில் பசுவை கடத்துவது பசுவதை செய்வது ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இங்கு தான் அதிகளவு பசுவதை வழக்குகள் பதியப்படுவதாகவும் பிரச்சார கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார். மேலும், பேசுகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது போல 3வது முறையாக பிரதமர் மோடி ஆட்சியில் சீதாதேவி பிறந்த இடமான இங்கு அவருக்கு கோயில் காட்டுவோம் என்றும் குறிப்பிட்டார்.

அடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பேசிய அமித்ஷா, பீகார் மக்களுக்கும் காஷ்மீருக்கும் என்ன சம்பந்தம் என்று கார்கே (காங். தலைவர்) கேட்கிறார். கார்கே, உங்களுக்கு 80 வயதைத் தாண்டிவிட்டது. மதுபானியின் ஒவ்வொரு குழந்தையும் காஷ்மீருக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பேச வேண்டாம் என்று பரூக் அப்துல்லா, மணிசங்கர் ஐயர் போன்றவர்கள் சொல்கிறார்கள். பாகிஸ்தானின் அணுகுண்டுகளை கண்டு ராகுல் காந்தி பயப்படலாம். பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் எங்களுடையது. அதை நாங்கள் திரும்ப பெறுவோம் அதனை மீண்டும் பிரதமர் மோடி ஆட்சி வரும்போது திரும்ப பெறுவோம் என பீகார் பிரச்சார கூட்டத்தில் அமித்ஷா கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்