ரோஹித் கூட யார் இறங்குவா? ‘இந்தியா கண்டிப்பாக யோசிக்கும்’ – இர்பான் பதான்!
சென்னை : ரோஹித் ஷர்மாவுடன் விராட் கோலியா அல்லது ஜெய்ஷ்வாலை களமிறக்கலாமா என இந்திய அணி யோசிக்கும் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டி வரும் ஜூன் மாதம் முதல் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்திய அணியில் விளையாடும் வீரர்களை பிசிசிஐ கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது.
அதன்படி, இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்) ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், இந்திய அணியில் ரோஹித் சர்மாவுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஓப்பனிங் இறங்குவாரா அல்லது விராட் கோலி இறங்குவாரா? என்ற கேள்வி தான் பலருடைய மனதிலும் இருக்கும். இதனை தேர்வு செய்வதில் தான் இந்திய அணி சற்று யோசிக்கும் எனவும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய இர்பான் பதான் ” என்னை பொறுத்தவரையில் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் கவலைக்குரிய ஒரு பகுதி என்றால் இந்திய அணியின் ஓப்பனிங்கில் ரோஹித் ஷர்மாவுடன் விளையாடப்போவது யார் என்று தான். ரோஹித்துடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இறங்கினால் சரியானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், அவர் ஒரு இடது கை பேட்டராக இருப்பதால் உலகக் கோப்பையில் ஓப்பனிங் செய்தால் நன்றாக இருக்கும்.
எதிரணி அணி இடது கை சுழற்பந்து வீச்சாளருடன் முதல் ஓவரை தொடங்குவதற்கான வாய்ப்புகள் ரொம்ப ரொம்ப குறைவு. எனவே, ஜெய்ஷ்வால் போன்ற வீரர் ஓப்பனிங்கில் இருந்தால் பவர் பிளே ஓவர்களில் நன்றாக ரன் குவிக்கலாம். இப்படி இந்திய அணி யோசித்தாலும் இரண்டு முறை யோசிக்கும். ஒன்று நான் சொன்னபடி மற்றோன்று விராட் கோலி.
விராட் கோலி இப்போது நல்ல பார்மில் இருக்கிறார் எனவே அவர் ரோஹித் சர்மாவுடன் இந்திய அணிக்கு உலகக்கோப்பை போட்டியில் ஓப்பனிங் செய்தால் நன்றாக இருக்கும் என யோசிப்பார்கள். எனவே, ரோஹித் சர்மாவுடன் ஃபார்மில் உள்ள விராட் கோலி ஓப்பனிங் செய்ய வேண்டுமா? அல்லது அனுபவமற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ரோஹித் ஓபன் செய்யவேண்டுமா என இந்திய அணி கண்டிப்பாக யோசிக்கும். எந்த முடிவு எடுக்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்” எனவும் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.