புதுச்சேரியில் கடல் சீற்றம் – சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் எச்சரிக்கை.!

Sea rage in Puducherry

சென்னை: புதுச்சேரியில் லேசான மழை, கடல் சீற்றம் காரணமாக கடலில் இறங்க சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

புதுச்சேரியில் ஏப்ரல் மாதத்தில் இருந்து வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவ்வபோது மழை பெய்து வருகிறது. இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்கள் அநேக இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், லேசான கடல் சீற்றம் காரணமாக புதுச்சேரி கடற்கரையில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்கு போலீசார் தடை விதித்தனர். இந்நிலையில், இன்று காலை கடற்கரையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை போலீசார் வெளியேற்றினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்