டி20க்கான செயற்கை மைதானம் ரெடி ..! சொன்னதை செய்து காட்டிய அமெரிக்கா !!
சென்னை : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான செயற்கையான மைதானத்தை அமெரிக்கா வெறும் 2 மாதத்தில் அதி நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி உருவாகியுள்ளது.
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை 2024 ஆண்டிற்கான தொடர் வரும் ஜூன் 2 முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது. அமெரிக்கா நாட்டில் உள்ள டெக்ஸ்சாஸ், நியூயார்க் மற்றும் புளோரிடா மாகாணத்தில் உள்ள 9 மைதானங்களில் இந்த டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் நியூயார்க் மாகாணத்தில் கிரிக்கெட் மைதானம் இல்லாமல் இருந்தது.
அதனால் நியூயார்க் புறநகரில் உள்ள நாசாவு கவுண்டியில் வெறும் 2 மாதத்திற்குள் ஒரு கிரிக்கெட் மைதானத்தை அமைப்போம் என ஐசிசி அறிவித்தது. அதாவது இது ஒரு தற்காலிமாக உருவாக்கப்படும் ஒரு செயற்கை மைதானம் என தெரிவித்தனர். அதை தொடர்ந்து எப்படி 2 மாதத்தில் ஒரு மைதானத்தை உருவாக்க முடியும் என ரசிகர்கள் இணையத்தில் பேசி கொண்டிருந்தனர்.
ஆனால் தற்போது அவர்கள் கூறியது போல வெறும் 2 மாதத்திற்குள் மைதானத்தின் முழு வேலைகளையும் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்கா முடித்து உள்ளனர். இந்த மைதானத்தில் சுமார் 34,000 பேர் அமர்ந்து போட்டிகளை கண்டுகளிக்கலாம் மேலும் இந்த மைதானத்தில் 8 டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது.
அதிலும் குறிப்பாக உலகமே எதிர்ப்பார்க்கும் ஜூன்-9ம் தேதி நடைபெற இருக்கும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கே இடையேயான போட்டி இங்கு தான் நடைபெற உள்ளது. மேலும், இந்த மைதானத்தில் அமைக்கப்பட்ட புல்லானது தஹோமா 31 பெர்முடா (Tahoma 31 Bermudagrass) என கோல்ப் (Golf) போட்டிகளின் மைதானத்தில் அமைக்கப்படம் அதே புற்கள் ஆகும்.
இதற்காக ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஒவல் மைதான ஆடுகள வடிவமைப்பாளரான டாமியன் ஹோக் தலைமையிலான குழுவினர் 10 செயற்கை ஆடுகளங்களை புளோரிடா நகரில் வைத்து சுமார் 3 மாதங்கள் பராமரித்து வந்துள்ளனர். அதில் இந்த மைதானத்திற்காக 6 செய்ற்க்கை ஆடுகளங்களை பயன்படுத்தி உள்ளனர். மீதம் உள்ள அந்த 4 ஆடுகளங்களையும் பயிற்சிக்காக மைதானத்தின் அருகே பயன்படுத்த உள்ளனர்.