பிற்பகல் வரை இந்த 14 மாவட்டங்களில் மழை பெய்யும்.!
சென்னை: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.