சிங்கப்பூரில் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதிவியேற்பு !! முடிவுக்கு வந்த 59 ஆண்டுகால சகாப்தம் !!
சென்னை : சிங்கப்பூர் நாட்டின் லாரன்ஸ் வோங்க் நேற்றைய நாளில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகாலமாக சிங்கப்பூர் நாட்டின் பிரதமராக இருக்கும் லீ சியென் லூங் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகி இருக்கிறார். மேலும், அந்நாட்டின் துணைப் பிரேதமாராகவும், நிதி அமைச்சராகவும் இருந்த லாரன்ஸ் வோங்க் நேற்று இரவு முறைப்படி பிரதமர் பதவியை ஏற்று கொண்டுள்ளார். மேலும், இவர்தான் சிங்கப்பூரின் 4-வது பிரதமரும் ஆவார். இதனால் சிங்கப்பூர் வரலாற்றில் 59 ஆண்டு காலம் நீடித்த ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது என கூறலாம்.
அதாவது 1965-ஆம் ஆண்டு சிங்கப்பூர் சுதந்திர நாடாக மாறியதில் இருந்து தற்போது வரை சிங்கப்பூருக்கு 3 பிரதமர்கள் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆட்சியில் இருக்கும் மக்கள் செயல் கட்சியைச் (People’s Action Party – PAP) சேர்ந்தவர்கள் அதிலும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்கள். சிங்கப்பூரின் முதல் பிரதமராக லீ குவான் யூ தேர்வானார். இவர்தான் இந்த நவீன சிங்கப்பூரின் நிறுவனராகக் கருதப்பட்டவர் ஆவார்.
மேலும், தற்போது பதவி விலகிய லீ சியென் லூங்-கின் தந்தையும் இவர் தான். இவர் தொடர்ந்து 25 ஆண்டுகள் சிங்கப்பூர் நாட்டை வழிநடத்தியவர் என்பது குறிபிடத்தக்கது. லீ சியென், 1984-இல் தனது தந்தை ஆட்சியில் இருக்கும்போதே இவர் அந்த கட்சியில் சேர்ந்து மக்களாக பணியாற்ற தொண்டங்கினார். சிங்கப்பூரின் 2-வது பிரதமரான கோ சோக் டோங்க் இன் கீழ் அவரது பதவி உயர்ந்ததோடு 2004-ம் ஆண்டு அவர் சிங்கப்பூருக்கு பிரேதமாரானார்.
தற்போது 59 ஆண்டுகளுக்கு பிறகு ‘லீ’ குடும்பத்தில் இருந்து யாரும் அடுத்த பிரதமர் ஆகாமல் கட்சியில் செயலாற்றிய மூத்த உறுப்பினரான லாரன்ஸ் வோங்கிற்கு இந்த பதிவியானது கிடைக்க பெற்றுருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு லீ சியென் லூங்கின் ஆட்சியில் சிங்கப்பூரின் பொருளாதாரம் பன்முகப்படுத்தப்பட்டு வளர்ச்சியடைந்தது. மேலும், அந்நாடு ஒரு சர்வதேச நிதி அதிகார மையமாகவும், சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது. மேலும், இந்த 20 ஆண்டுகளில் இவரால் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் இரு மடங்குக்குக் மேல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.