ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் கேஜிஎஃப் விக்கி கைது.!

kgf vicky

KGF Vicky : ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகி கேஜிஎஃப் விக்கி கைது செய்யப்பட்டார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆண்களுக்கான ஆடைகள் அடங்கிய கேஜிஎஃப் என்ற சில்லறை விற்பனைக் கடையை வைத்திருக்கிறார். மேலும் அவர் தனது கடையின் விளம்பரம் செய்து, திறமையாக பேசி மக்களை யூடியூப் மூலம் கவனம் ஈர்த்தார். இதன் மூலம் இவருக்கு அஜித் நடித்த துணிவு படத்தில் சிறிய காட்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அடிக்கடி, சண்டை மற்றும் சர்ச்சை கூறிய கருத்துக்கள் முன் வைத்து தனது கடையை விளம்பரம் செய்வதன் மூலம் அதிகளவில் இவரது வீடியோக்கள் இணையத்தை கலக்கியது. மேலும் இவர் பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகி ஆவர். ஆம், அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் 7 மாதங்களுக்கு முன்பே பாஜகவில் இருந்து இவர் நீக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது துணிக்கடையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் ரூ.1 லட்சம் திருடி தலைமறைவாகி, பின்னர் மீண்டும் அவர் வேலை கேட்டு வந்தபோது விக்கி அடியாள் வைத்து இரும்பு ராடால் தாக்கியது தெரிய வந்துள்ளது.

ராடால் தாக்கப்பட்ட அந்த ஊழியர் படுகாயமடைந்த நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனை அறிந்த போலீசார், தாக்கப்பட்ட ஊழியரிடம் இருந்து புகாரினை பெற்று கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய கேஜிஎஃப் கடை உரிமையாளர் விக்கியை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இதனையடுத்து, விக்கி சேலத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில், போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்