TNPSCயின் அசத்தல் அறிவிப்பு.. பல்வேறு அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகள்.!

TNPSC TNGovt jobs notification

சென்னை : தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பை TNPSC அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் இன்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப பணிகளுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு என வரையறுக்கப்பட்ட இந்த தேர்வானது மொத்தம் 20 பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2024 என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் நாள் :

பொதுத்தமிழ், பொது அறிவு, திறனறிவு, நுண்ணறிவு ஆகியவை அடங்கிய முதல் தாள் தேர்வு நடைபெறும் நாள் – 28.07.2024.

பொறியியல், வேளாண்மை, புள்ளியில், உடற்கல்வி முதல் குழந்தை வளர்ச்சி , உளவியல் உட்பட மொத்தம் 21 பாட பிரிவுகளுக்கான தேர்வு – 12.08.2024 முதல் 16.08.2024 வரை.

காலிப்பணியிடங்கள் :

சட்ட கல்லூரி பணிகள், உடற்கல்வி பணிகள், போக்குவரத்து கழக பணிகள் என மொத்தம் 20 வெவ்வேறு பணிகளுக்கு 118 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க கடைசி நாள் – 14.06.2024.

விண்ணப்பம் திருத்தம் – 19.06.2024 முதல் 21.06.2024.

விண்ணப்பிக்கும் முறை :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான tnpsc.gov.in என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும்

அதில், இன்று (15.05.2024) முதல் தேதியிடப்பட்ட தொழில்நுட்ப பணிகளுக்கான வேலைவாய்ப்பு (நேர்முக தேர்வு) லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் வரும் பக்கத்தில் அறிவிப்பாணையை (Notification) முழுதாக படிக்க வேண்டும். அதில் தங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பணிக்கான கல்வி தகுதி, பதவி விண்ணப்ப குறியீடு எண் ஆகியவற்றை பதிவு செய்து வைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதற்குரிய லிங்க்கில் கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கான அழைப்பு வரும் எனவும், எழுத்து தேர்வு முடிந்த பிறகு தகுதி வாய்ந்த நபர்களுக்கு நேர்காணல் மூலம் பணியாணை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்