டிப்பர் லாரி மீது பேருந்து மோதி தீப்பிடித்து விபத்து.. 6 பேர் உயிரிழந்த பரிதாபம்.!

Fire Accident

சென்னை: ஆந்திரப் பிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதி தீப்பிடித்து எரிந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திரா மாநிலம் பால்நாடு மாவட்டத்தில் வாக்களித்துவிட்டு ஊர்திரும்பிய 6 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். ஐதராபாத்தைச் சேர்ந்த 30 பேர் தனியார் பேருந்தில் சின்னகஞ்சம் என்னும் சொந்த ஊருக்கு வாக்களிக்கச் சென்றுள்ளனர். நேற்று இரவு அவர்கள் வீடு திரும்பும்போது பேருந்து லாரியின் மீது மோதியது.

முதலில் லாரி தீப்பிடித்த நிலையில், பேருந்துக்கும் தீ பரவியது. இந்த விபத்தில் சிக்கி, 2 ஓட்டுநர்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர்.  20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இரு ஓட்டுநர்களும் மதுபோதையில் இருந்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கின்றனர்.

விபத்து நிகழந்ததும், தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தது ஆனால் அதற்குள் இரண்டு வாகனங்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. காயமடைந்தவர்கள் சிலகலுரிப்பேட்டை மற்றும் குண்டூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்