வாரணாசி ஞானவாபி மசூதி இடத்தில் இந்து கோயில் கட்டப்படும்.! ஆசாம் முதல்வர் பரபரப்பு.!

Assam CM Himanta Biswa Sarma

சென்னை : வாரணாசி ஞானவாபி மசூதி இடத்தில் பாபா விஸ்வநாத் கோயில் கட்டப்படும் என ஆசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. பாஜக ஆட்சியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது போல வாரணாசியில் மசூதி உள்ள இடத்தில் பாபா விஸ்வநாத் கோயில் கட்டப்படும் என பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார்.

அயோத்தியில் பாபர் மசூதி முன்னதாக கட்டப்பட்டு இருந்த இடமானது ராமர் கோயில் இருந்த இடம் கூறி தொல்லியல் துறை ஆய்வுக்கு பிறகு உச்சநீதிமன்றம் 2019இல் தீர்ப்பளித்தது. மேலும் மசூதி கட்டுவதற்கு பாபர் மசூதி இருந்த இடத்தில் இருந்து சுமார் 20 கிமீ அப்பால் இடம் ஒதுக்கப்பட்டது. இதனை அடுத்து 2020இல் ராமர் கோயில் கட்ட துவங்கப்பட்டு , இந்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது.

இதனை குறிப்பிட்டு பேசிய அசாம் மாநில முதலவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கடந்த முறை 300 இடங்களை பெற்றோம். அதனால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டினோம். அடுத்து இந்த முறை 400 இடங்களை வென்று, உ.பி மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமி இடத்தில் கிருஷ்னர் கோயிலும், பிறகு வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதிக்கு பதிலாக பாபா விஸ்வநாத் இந்து கோயிலும் கட்டப்படும் என்று கூறினார்.

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி அமைந்துள்ள இடமானது முன்னர் இந்து கோயிலாக இருந்ததாகவும், அதனை இடித்து மசூதி கட்டப்பட்டுள்ளதாகவும் கூறி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரச்சார கூட்டத்தில் மேலும் பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை காங்கிரஸ் மறைத்துவிட்டது. அதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசியதே இல்லை . இம்முறை மீண்டும் பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவில் சேர்க்கப்படும் எனவும் கூறி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்