பிரதமர் மோடியின் சொத்துமதிப்பு 3.02 கோடி ரூபாய்.! தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்…

PM Modi

சென்னை : பிரதமர் மோடியின் சொத்துமதிப்பு 3.02 கோடி ரூபாய் என தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்.

2014 மற்றும் 2019 வெற்றியை தொடர்ந்து மீண்டும் வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அதற்காக இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வாரணாசி தொகுதியில் கடைசி கட்ட தேர்தல் நாளான ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பிரதமர் மோடியின் வேட்புமனுவில் குறிப்பிட்டபடி, அவரது மொத்த சொத்து மதிப்பு 3.02 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2.85 கோடி ரூபாய் வங்கியில் வைப்பு தொகையாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2014 முதல் 10 ஆண்டுகால பிரதமர் பதவியிலும், அதற்கு முன்னர் 3முறை குஜராத் முதல்வராக இருந்துள்ளார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடியிடம் அசையா சொத்துக்கள் என எதுவும் இல்லை என்றும், சொந்தமாக எந்தவித வாகனங்களும் இல்லை என்றும், ரொக்கமாக 52 ரூபாய் மட்டுமே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்ததாக, 1978ஆம் ஆண்டு டெல்லியில் பி.ஏ பட்டம் பெற்றதாகவும், 1983ஆம் ஆண்டு குஜராத்தில் முதுகலை பட்டம் பெற்றதாகவும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்