இஸ்ரேல் தாக்குதல்.. முன்னாள் இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு.!
சென்னை: ரஃபாவில் ஐக்கிய நாடுகள் சபையின் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் காசா பகுதியில் உள்ள ரஃபாவில் அவரது வாகனம் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இந்த தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கிய பின்னர் ஐநாவின் சர்வதேச ஊழியர் ஒருவர் இறந்தது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இதுவரை காசாவில் குறைந்தது 35,091 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 78,827 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐநா அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற கர்னல் வைபவ் அனில் காலே, இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஐநா பாதுகாப்புத் துறையில் (டிஎஸ்எஸ்) பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாக சேர்ந்தார் என சொல்லப்படுகிறது.