‘அதிக மரியாதை உண்டு’ ! தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ஆர்வம் காட்டும் ஜஸ்டின் லாங்கர் ?

Justin Langer

சென்னை : இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளரின் பதவிக்கு ஜஸ்டின் லாங்கர் ஆர்வமாக இருப்பதாக அவர் தற்போதைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு பிசிசிஐ விண்ணப்பங்களை பெற்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் ஆர்வமாக உள்ளார் என தற்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியையும், அதன் மரியாதையையும் மீட்டெடுத்த பெரிய பங்கானது பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கருக்கு உண்டு என்றாலும் கிரிக்கெட் பயிற்சியின் போது சக வீரர்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டதன் காரணமாக வீரர்கள் கிரிக்கெட் வாரியத்திடம் முறையிட்ட காரணத்தினால், அவரே அந்த தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து தற்போது அவர் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்றி வருகிறார். மேலும், லக்னோ அணி இந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் போகும் வாய்ப்பையும் தக்க வைத்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா (Times Of India) பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில் இந்தியா அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற ஆர்வம் உள்ளதா என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதை குறித்து அவர் பேசிய போது, “நிச்சயமாக நான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வமாக தான் இருக்கின்றேன். ஆனால் அதைப் பற்றி நான் தற்பொழுது எதுவும் நினைக்கவில்லை. மேலும், எந்த ஒரு சர்வதேச அணியாக இருந்தாலும் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பின் மீதும், அந்த பயிற்சியாளர்கள் மீதும் எனக்கு நிறைய மரியாதை உண்டு. அந்த பதவிக்கு இருக்கும் அழுத்தத்தை நான் நன்றாக புரிந்து கொள்கிறேன்.

அதே நேரம் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயலாற்றுவது ஒரு சாதாரண விஷயம் கிடையாது”, என்று ஜஸ்டின் லாங்கர் அந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். அதே நேரம் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) விண்ணப்பித்தவர்கள் யார் என்பது தொடர்பான விவரங்களை முன் கூட்டியே தெரிவிக்கப்படாமல் இருப்பதோடு, அதனை காத்தும் வருகின்றனர்.

இதனால் ஜஸ்டின் லாங்கர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதிவிக்கு விண்ணப்பித்தாரா என்பது குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை என்றாலும் அவரது ஆர்வத்தை பார்க்கும் பொழுது அவர் விண்ணப்பித்திருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வளைத்தளத்தில் கூறி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்