வணிக வளாகம் கட்டுமான சிக்கல்? கவுண்டமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

Goundamani

சென்னை : நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க கோரிய உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் கவுண்டமணி 1996-ம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவருக்கு சொந்தமான நிலத்தை சொந்தமாக வாங்கி அந்த நிலத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு இருந்தார். அந்த வணிக வளாகத்தை கட்டும் பணியை அபிராமி பவுண்டேஷன் நிறுவனத்திடம் ஒப்படைக்கவும் செய்தார். இதனையடுத்து, இந்த வணிக வளாகம் கட்டும் பணிக்காக ரூ. 3 கோடியே 58 லட்சம் பணமும் ஒப்பந்தம் போடப்பட்டு இருந்ததாம்.

இதனையடுத்து,  பணம் கொடுத்த பிறகும் இன்னும் அந்த நிறுவனம் வணிக வளாகம் கட்டுவதற்கான பணிகளை 2003-ஆம் ஆண்டு வரை தொடங்கவில்லை என்று கவுண்டமணி சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 46 லட்சம் ரூபாய்க்கு மட்டும் கட்டட பணிகள் முடிந்து இருந்தது தெரிய வந்தது.

அதனைதொடர்ந்து, கவுண்டமணி தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி, 2008 ஆகஸ்ட் மாதம் முதல், மாதம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அதைப்போல, கவுண்டமணியிடம் இருந்து பெற்ற நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.

உயர்நீதி மன்றம் கொடுத்த இந்த உத்தரவுக்கு அந்த நிறுவனம் ” கவுண்டமணி கவுண்டமணி தரப்பில் இருந்து 3 தவணையாக முதலில் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு பிறகு கிட்டதட்ட 3 கோடி வரை கொடுக்கப்படவில்லை. இந்த பாக்கி தொகையை கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் உயர்நீதி மன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது என்று கூறி நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

இந்த நிலையில், இன்று விசாரணைக்காக வந்த இந்த வழக்கில் கட்டுமான நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை  தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  இதன் மூலம்,26 ஆண்டுகள் கழித்து கவுண்டமணிக்கு நீதி கிடைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்