நாளை 96 தொகுதிகளில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு.!

4th phase polling

Lok Sabha Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், நாளை (மே 13ம் தேதி) நான்காம் கட்ட வாக்குப்பதிவுநடக்கிறது.

இதுவரை மூன்று கட்டமாக 285 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. கடந்த மே 7ம் தேதி நடந்த 3ம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அடுத்ததாக, ஆந்திரா, தெலங்கானா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் நாளை 4ஆம் கட்ட வாக்குப்பதிவு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த 96 தொகுதிகளிலும், மொத்தம் 1,717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதோடு சேர்த்து ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை (மே 13ம் தேதி) சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இவற்றுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.

எந்தெந்த மாநிலங்களுக்கு நாளை தேர்தல் நடக்கிறது:

ஆந்திரப் பிரதேசம் – 25 தொகுதிகளில் 25
பீகார் – 40 தொகுதிகளில்  5
ஜார்கண்ட் – 14 தொகுதிகளில்  4
மத்தியப் பிரதேசம் – 29 தொகுதிகளில் 8
மகாராஷ்டிரா – 48 தொகுதிகளில் 11
ஒடிசா – 21 தொகுதிகளில் 4
எலங்கானா – 17 தொகுதிகளில் 17
உத்தரபிரதேசம் – 80 தொகுதிகளில் 13
மேற்கு வங்கம் – 42 தொகுதிகளில் 8
ஜம்மு காஷ்மீர் – ஐந்து தொகுதிகளில் 1

முக்கிய வேட்பாளர்கள்

ஆந்திராவில் பாஜக, தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியை உள்ளடக்கிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மேலும் தெலுங்கானாவில் காங்கிரஸ், பாஜக மற்றும் பிஆர்எஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்