உங்க குழந்தைகளுக்கு பிடித்த பால் பணியாரம் செய்யலாமா?

paal paniyaram

பால் பணியாரம் -இந்தக் கோடை விடுமுறையை தித்திப்போட கழிக்க பால் பணியாரம் செய்வது எப்படி என பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:

  • பச்சரிசி =1 கப்
  • உளுந்து =1 கப்
  • முழு தேங்காய் =1
  • ஏலக்காய் தூள் =1 ஸ்பூன்
  • சர்க்கரை =தேவைக்கேற்ப
  • உப்பு சிறிதளவு
  • எண்ணெய் =தேவைக்கேற்ப

urad dal

செய்முறை :

முதலில் எடுத்து வைத்துள்ள உளுந்து மற்றும் பச்சரிசியை மூன்று முறை கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு அதை சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். மாவு ,இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். அதிகமாக தண்ணீர் சேர்த்து அரைக்கக் கூடாது.

flour

இப்பொழுது தேங்காயையும் பால் எடுத்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். இரு முறை பால் எடுத்தால் போதுமானது. பால் எடுத்த பிறகு சர்க்கரை உங்கள் இனிப்புக்கு தகுந்தவாறு சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஏலக்காய் தூளும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

coconut milk (1)

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும். அந்த எண்ணெயில் அரைத்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்துப் போட்டு பொன்னிறமாக பொறித்தெடுக்கவும். பிறகு அந்த பொறித்த பணியாரங்களை மிதமான சூடு உள்ள தண்ணீரில் சேர்த்து கிளறிவிட்டு எடுத்து விடவும்.

paal paniyaram (1)

அப்போதுதான் அதில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேறும். இப்பொழுது அந்தப் பணியாரத்தை தேங்காய் பாலில் அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்தால் சுவையான பால் பணியாரம் தயாராகிவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்