5 நாட்களில் 54 ஆயிரம் வாகனங்களுக்கு இ-பாஸ்.! சுற்றுலா பயணிகளால் நிரம்பும் கொடைக்கானல்.!

E Pass for Kodaikanal

Kodaikanal : இதுவரையில் கொடைக்கானல் செல்ல சுமார் 54 ஆயிரம் வாகனங்கள் இ-பாஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோடை காலம் தொடங்கியது என்றாலே தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்ச்சியான இடங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிடும். கட்டுக்கடங்காத வகையில் வாகன நெரிசல் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாவதை தடுக்க அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுநல வழக்கில் ஓர் புதிய உத்தரவை பிறப்பித்தது.

அதன்படி, ஊட்டி கொடைக்கானல் வருவோர் , கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்டது போல, தங்கள் வாகனங்களுக்கு இ-பாஸ் பெறுவது கட்டாயம் என உயர்நீதிமன்றம் அறிவித்தது. கடந்த 7ஆம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறை செயல்பாட்டில் இருக்கிறது. இ-பாஸ் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படும்.

இப்படியான சூழலில் , கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்காக வெவ்வேறு தேதிகளில் இதுவரை 54,116 வாகனங்கள் (சுமார் 4 லட்சம் பேர்) பதிவு செய்துள்ளனர் என்றும், 7ஆம் தேதி முதல் 9,555 வாகனங்கள் கொடைக்கானல் வந்துள்ளன என்றும், இன்று சனிக்கிழமை மட்டும் இதுவரையில் சுமார் 2,500 வாகனங்கள் வந்துள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  கொடைக்கானல் செல்ல ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் பேர் இ-பாஸ்காக விண்ணப்பிப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், ஊட்டியில், நேற்று (மே 10) முதல் 11 நாள் மலர் கண்காட்சி தொடங்கி விட்டது. வரும் மே 20ஆம் தேதி வரையில் மலர் கண்காட்சி இருக்கும். இப்படியான சூழலில் இ-பாஸ் நடைமுறை காரணமாக வழக்கமாக இருக்கும் கூட்டத்தை விட இந்த முறை குறைவாகவே சுற்றுலா பயணிகளின் கூட்டம் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இருந்தாலும், இந்த இ-பாஸ் நடைமுறை செயல்பாட்டில் இருப்பதன் காரணமாக தற்போது ஊட்டி மற்றும் கொடைக்கானல் மலைப்பாதைகளில் வாகன நெரிசல் பெருமளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்