டெல்லி கேப்டன் ரிஷப் பண்டிற்கு தடை…RCB போட்டியில் புதிய சிக்கல்.?

RishabhPant

Rishabh Pant : டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட அபராதத்துடன் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நாளை (மே 12) பெங்களூரு  அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் விளையாட பிசிசிஐ தடை விதித்துள்ளது. ஏனென்றால், ஏற்கனவே, 2 முறை டெல்லி மெதுவாக பந்துவீசியதற்கு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து கடந்த 7-ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் மெதுவாக பந்துவீசியதற்கும் (slow over-rate) அபராதம் விதிக்கப்பட்டது.

2 முறை அபராதம் விதிக்கப்பட்டும் மூன்றாவது முறையாகவும் மெதுவாக பந்துவீசியதன் காரணத்தால் ரிஷப் பண்ட்க்கு 30 லட்சம் அபராதம் மற்றும் ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் போட்டிக்கு முன்னதாக, கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி மெதுவாக பந்துவீசிய குற்றத்திற்காக கேப்டன் ரிஷப் பண்ட்க்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 

அதற்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட்க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நாளை பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இல்லாதது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் டெல்லி அணி பிளே ஆப்சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

இந்த சீசனில், 12 போட்டிகள் விளையாடி 6 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி விவரப்பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக நடைபெறும் இரண்டு போட்டிகளும் டெல்லி அணிக்கு முக்கியமான போட்டி  எனவே, இப்படியான முக்கியமான போட்டியில் ரிஷப் பண்ட் இல்லை என்பதால் அணியை எந்த வீரர் வழிநடத்த போகிறார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்