ஓஹோ.! இதனால்தான் பிரம்மாவிற்கு வழிபாடு இல்லையா ?

bhirama

Brahma-பிரம்மாவிற்கு ஏன் கோவில்கள் இல்லை என்ற காரணத்தை பற்றி இப்பதிவில் காணலாம்.

பிரம்மா கோவில்கள் :

பிரம்மதேவன் தான் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் படைத்தார் என இந்து மதம் கூறுகிறது. இவ்வளவு புகழ்பெற்ற பிரம்மாவிற்கு ஒரு சில இடங்களில் தான் கோவில் உள்ளது.

ராஜஸ்தானில் புஷ்கர் என்ற  இடத்திலும் தமிழ்நாட்டில் திருப்பட்டூர் எனும் இடத்திலும் பிரம்மா கோவில் உள்ளது .இப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் பிரம்மாவிற்கு கோவில் உள்ளது.

என்றாவது நாம் யோசித்து இருப்போம் ஏன் பிரம்மாவிற்கு வழிபாடு இல்லை என்று,அதற்கு தான் 3 காரணங்கள் கூறப்படுகிறது  அதை இப்பதிவில் காண்போம்.

முதல் காரணம் :

பிரம்மா நான்கு முகங்களையும்  நான்கு கரங்களையும் கொண்டவர் இப்படி பல சக்தி கொண்ட அவர் பூமியின் பரிணாம வளர்ச்சிக்காக ஒரு யாகம் செய்ய முடிவு எடுத்தார். அதை உறுதி செய்வதற்காக தாமரை மலரை ஒரு இடத்தில் விளச்செய்கிறார்.

அந்த தாமரை ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் இடத்தில் விழுந்தது .அங்கு யாகம் நடத்த ஏற்பாடுகள் நடந்தது .அந்த யாகத்திற்கு தன் மனைவியான சரஸ்வதி சரியான நேரத்திற்கு வராததால் அங்குள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து யாகத்தில் அமர்த்தினார்.

இதை அறிந்த சரஸ்வதி கோபம் முற்று இனிமேல் உங்களுக்கு பூமியில் கோவில் இருக்காது என்று சாபமிட்டார். ஆனால் தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சரஸ்வதி தேவி பிரம்மாவிற்கு இங்கு மட்டுமே கோவில் இருக்கும் எனவும்  கூறினார்.

இரண்டாவது காரணம் :

பிரம்மாவிற்கும் விஷ்ணுவுக்கும் ஒரு முறை தன்னுள்  யார் பெரியவர் என்ற விவாதம்  நடந்து கொண்டிருந்தது .அப்போது அதை அறிந்த சிவபெருமான் அங்கு வந்து தன்னுடைய திருமுடியும் திருவடியையும் யார் பார்த்துவிட்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர் என கூறினார்.

பிரம்மா திருமுடியை காணவும், விஷ்ணு திருவடியை காணவும் செல்கிறார்கள் ,பல போடி ஆண்டுகள் ஆன பிறகும் காண இயலவில்லாததால் விஷ்ணு சிவபெருமானிடம் தன்னால் முடியவில்லை என ஒப்புக் கொள்கிறார் .

ஆனால் பிரம்மா  தன்னுடைய தலைக்கனத்தால் சிவபெருமானில் தலையிலிருந்து விழுந்த தாழம் பூவுடன் தன்னை பார்த்து விட்டதாக பொய் கூறும் படி சொல்கிறார்.தாழம்பூவும் அவ்வாறு பொய் கூறியது  இதனை அறிந்த சிவபெருமான் கோபமடைந்து தாழம்பூ விற்கும் பிரம்மாவுக்கும் சாபம் விடுகிறார்.

பிரம்மாவிடம்,  பூலோகத்தில் இனிமேல் உமக்கு வழிபாடு கிடையாது என சாபம் விடுகிறார். தாழம் பூவிற்கு இனி நீ பூஜைக்கு பயன்பட மாட்டாய் என்றும் நீ இருக்கும் இடத்தில் பாம்புகள் குடியிருக்கும் என்றும் சாபமிடுகிறார். இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது

மூன்றாவது காரணம் :

பிரம்மன் பிரபஞ்சத்தை உருவாக்கும்போது சகரூபை என்ற பெண்ணை உருவாக்கினார் .அவள்  பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தால், அதில் மயங்கிய பிரம்மன் தன் பார்வையை அந்த பெண் மீது திருப்பினார். அந்தப் பெண் தன் முகத்தை மறைக்க பல திசைகளில் திரும்பினார் .

பிரம்மாவும் ஒவ்வொரு திசைகளுக்கும் ஒவ்வொரு தலையை உருவாக்குகிறார். மொத்தம் நான்கு தலைகள் உருவாகிறது. இதற்கு மேலும் ஒரு தலை ஐந்தாவதாக உருவானது, அதை சிவபெருமான் வெட்டி வீழ்த்தினார்.

உமது மகள் ஸ்தானத்தில் இருக்கும் சகரூபயை பார்த்து மோகம் கொண்டு விட்டாய் இனிமேல் பூலோகத்தில் உமக்கு கோவில்கள் இருக்காது என சிவபெருமான்  சாபம் விடுகிறார்.

இந்த மூன்று காரணத்தால்  தான் பிரம்மாவிற்கு கோவில்கள் மற்றும் வழிபாடு இல்லை என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்