நீங்கள் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவர்களா? அப்போ உஷாரா இருங்க.!

plastic bottle

Plastic bottle-பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி இப்பதிவில் காணலாம்.

பிளாஸ்டிக் பொருட்கள் நாம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத பொருளாகிவிட்டது நம் உட்காரும் நாற்காலி தொடங்கி குடிக்கும் தண்ணீர் கப் வரை  பிளாஸ்டிக் தான்.

PET-[ poly ethylene terephalate]:

தண்ணீர் பாட்டில்களில் பாலி எத்திலின் டெரிப்தாலேட் என்ற வகை கெமிக்கல்  உள்ளது. இந்த வகை பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூர வீசி விட வேண்டும் .

ஏனென்றால் இதில் உள்ள டெரிப்தாலேட் வெளியாகி கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும், ஆண்களின் விந்து அணுக்களின் எண்ணிக்கைகளையும் குறைக்கும்.

மேலும் இந்த பாட்டில்கள் சூரிய வெளிச்சத்தில் பட்டு சூடாகும் போது டை ஆக்சைடு என்ற ரசாயனம் வெளியேறும் .இது மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும். நாம் பயன்படுத்தும் பாட்டில்களில் இதற்கான அறிவிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதன் ரீசைக்கிள் எண்களை  பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.இதன் ரீசைக்கிள் எண்=3

BPA-[poly carbonate biphenyl-A]:

இந்த பாட்டில்களில் தான் நாம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுத்து விடுவோம். இந்தப் பாட்டில்களில்  பைப்பினால் ஏ கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும். இது மிக மோசமான ரசாயனம்.

இதனால் உடல் பருமன் ஏற்படும். குறை பிரசவம் ,விரைவில் பெண்கள் பூப்படைதல் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு கருச்சிதைவை கூட ஏற்படுத்தும் என்று மருத்துவ ஆராய்ச்சியில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாகும்.

இதன் ரீசைக்கிள் நம்பர் ஏழு ஆகும். இந்த ரீசைக்கிள் நம்பர் 7 மற்றும் 3 வகைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பாலியத்திலும் மற்றும் பாலி ப்ரொபலின் போன்ற பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்டவைகளை  பயன்படுத்தலாம். இது உயர் ரக பிளாஸ்டிக் கொண்டு  தயாரிக்கப்பட்ட பாட்டில்களாகும். இதன் ரீசைக்கிள் நம்பர் 2,4,5 இந்த வகை பாட்டில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஆனாலும் கூட முடிந்தவரை பிளாஸ்டிக்களை உபயோகிப்பதை விட்டு ஸ்டெயின்லெஸ் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிப்பது தான் நல்லது ஏனென்றால் எந்த வகை உயர் வக பிளாஸ்டிக் இருந்தாலும் அதிலும் மைக்ரோ பிளாஸ்டிக் உள்ளது. ஒரு லிட்டர் தண்ணீரில் 10 ஆயிரம் மைக்ரோ பிளாஸ்டிக் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே நாம் பார்த்து வாங்கும்போது BPA FREE என அச்சிடப்பட்டுள்ளதா என்று  பார்த்து வாங்க வேண்டும்.இந்த விழிப்புணர்வை நீங்கள் தெரிந்து கொண்டு இனிமேல் பாட்டில்களை தேர்ந்தெடுக்கும் போது கவனமுடன் வாங்கி பயன்படுத்த வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்