ஜூன் 4இல் பிரதமர் மோடிக்கு ஓய்வு.! அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி.!

AAP Leader Arvind Kejriwal

Arvind Kejriwal : ஜூன் 4இல் பிரதமர் மோடிக்கு ஓய்வு என ஆம் ஆத்மி அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி இருந்த அரவிந்த கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரையில் இடைகால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்து இருந்தது உச்சநீதிமன்றம். இதனை அடுத்து அவர் நேற்று திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். அதனை அடுத்து வீடு திரும்பிய கெஜ்ரிவால், இன்று காலை டெல்லியில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இதனை அடுத்து தற்போது டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது பேசுகையில், நான் சிறையில் இருந்து வெளியே வந்து முதன் முதலாக உங்களை சந்திக்கிறேன். 50 நாட்களுக்குப் பிறகு உங்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இப்போதுதான் என் மனைவி மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோருடன் அனுமன் கோவிலுக்குச் சென்று இருந்தேன். அனுமரின்  ஆசீர்வாதம் எங்கள் கட்சிக்கும் எங்களுக்கும் உள்ளது. அவருடைய அருளால் இன்று நான் உங்கள் முன் இருக்கிறேன்.

எங்கள் ஆம் ஆத்மி கட்சி இரண்டு மாநிலங்களில் மட்டுமே உள்ள ஒரு சிறிய கட்சி. ஆனால், பிரதமர் மோடி எங்கள் கட்சியை அளிக்க ஒரே நேரத்தில் எங்கள் கட்சியை சேர்ந்த நான்கு தலைவர்களை சிறைக்கு அனுப்பினார். பெரிய கட்சியில் இருந்து நான்கு முக்கிய தலைவர்கள் சிறைக்கு சென்றால் அந்த கட்சியே அழிந்துவிடும். அப்படி இருக்கையில், ஆம் ஆத்மி கட்சியை அழிக்க பிரதமர் மோடி விரும்புகிறார். ஆம் ஆத்மி கட்சிதான் நாட்டிற்கு எதிர்காலத்தைக் கொடுக்கும் என்று பிரதமர் மோடியே நம்புகிறார்.

நிச்சயமாக, ஜூன் 4இல் பிரதமர் மோடிக்கு ஓய்வு கிடைக்கும். எங்களை சிறைக்கு அனுப்பிவிட்டு நீங்கள் வெற்றி பெற முடியாது. அமித்ஷாவை பிரதமராக மாற்ற மோடி பிரச்சாரம் செய்து வருகிறார். பாஜக ஆட்சியின் ஊழலை நாங்கள் அம்பலப்படுத்துவோம். மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் செய்த ஊழலை மறைக்க முடியாது. எல்லா அரசியல் கட்சிகளையும் அழித்துவிட பாஜக நினைத்து வருகிறது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். அவர்களால் 140 கோடி மக்களை ஏமாற்ற முடியாது என இன்று ஆம் ஆத்மி அலுவலகத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார்.

இந்த சந்திப்பு நிறைவடைந்ததும், இன்று மாலை பஞ்சாப் முதல்வர் பக்வந்த்மான் உடன் டெல்லியில் ரோடு ஷோ பிரச்சாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ள உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்