கவினுக்கு கதையறிவு இல்லை.. இது ஒரு மொக்க படம்! ஸ்டார் படத்தை விளாசிய ப்ளூ சட்டை மாறன்.!
Blue Sattai Maran ON STAR Review : ஊரே கவின் நடித்த ஸ்டார் படத்தைபாராட்டியும் சீராட்டியும் வரும் வேலையில், ப்ளூ சட்டை மாறன் படத்தை மொக்க படம் என்று கூறி, கடமையாக விமர்சித்துள்ளார்.
டாடா படத்தை தொடர்ந்து கவின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘ஸ்டார்’ திரைப்படம் இறுதியாக நேற்று (மே 10) திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று, பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.
இளன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார், படத்தில் கவின் தவிர, இந்தப் படத்தில் பிரபல நடிகர் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் ஆகியோரும் நடித்துள்ளனர்.
வெறும் ரூ.12 கோடி செலவில் தயாரான இப்படம் முதல் நாளில் ரூ.3.5 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளதால் வரும்KAVIN நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
இவ்வாறு, படத்தை பார்த்துவிட்டு அனைவரும் பாசிடிவ் விமர்சனங்களை குவித்து வரும் வேலையில், சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், படத்திலிருந்து பாதி சீனை தூக்கி விட்டால் கூட எந்த ஒரு ஜம்ப்பும் இருக்காது என கடுமையமாக விமர்சனம் செய்துள்ளார்.
ப்ளூ சட்டை விமர்சனம்
படம் குறித்து விமர்சித்த ப்ளூ சட்டை மாறன், “படத்தில் ஹீரோவின் அப்பாவுக்கு சினிமாவில் ஹீரோவாக வேண்டுமென நினைக்க, அது முடியாமல் போக, உடனே தன் மகனை ஹீரோவாக்க வேண்டும் என எண்ணி அவனை ஹீரோவாக்க போராடுகிறார். பல தடைகளை தாண்டி ஹீரோவாகிறாரா இல்லையா என்பது தான் படத்தின் கதை.
ஆனால், படத்தோட கதையை மறந்து, முதல் பாதி ஒரு ஹீரோயினை காதல் செய்வது போன்றும், இரண்டாவது பாதி இன்னோரு ஹீரோயினை காதல் செய்வதும் என தாம் எடுக்க வந்த கதையை தாண்டி சென்றதும் உதவி இயக்குனர் நியாபகம் படுத்தினார் போல, அதன் பின் படத்தோட கதைக்கு கொண்டுவந்துள்ளார் இயக்குனர்.
இப்படி, எடுக்க வேண்டிய கதைக்குள்ள அப்போப்போ வந்து போகிறது, இவங்களுக்கு சினிமாவை எடுக்க தெரியல்னு பாத்தா சினிமாவை என்னென்னு தெரியலை. இங்கு இல்லாதது நடிப்பு பயற்சியா பாம்பையில் உள்ளது? நேரா ஹீரோ நாயகனாக வேண்டும் என பாம்பைக்கு செல்கிறார்.
தமிழ்நாட்டில் இல்லாமல் கூட பரவாயில்லை பக்கத்துல இருகிற கேரளாவுக்கு சென்றிருக்கலாம். ஆனால் ஹீரோ நேராக பாம்பை சென்றது அங்கு இருக்கிற நடிகர்கள் எல்லாம் நடிச்சு தள்ளுற மாறி அங்கு சென்றிருக்கிறார். இங்கு இருக்கிற ஒரு விஜய் ஆண்டனி கூட, பரவாயில்லை அங்கு இருக்கிற அவ்ளோ பேரும் விஜய் ஆண்டனி தானடா என்று விமர்சிக்கிறார்.
படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார், ஆனால் விஜய் ஆண்டனி ஏன் இதுக்குள்ள இழுத்தார் என்று தெரியவில்லை. அதன்பின், படத்துக்குள்ள வந்த இரு நடிகைகளையும் விட்டுவைக்க வில்லை. அவர்கள் ஏன் வர வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
படத்திலிருந்து பாதி சீனை தூக்கி விட்டால் கூட எந்த ஒரு ஜம்ப்பும் இருக்காது. ஒரு ஷாட் பிலிமை மொத்தமாக சேர்த்து பெரிய படமாக எடுத்து வைத்துள்ளனர். இது ஒரு சூர மொக்க படம். டாடா படத்தை பார்த்துவிட்டு, கதை தேர்ந்தெடுக்கும் அறிவு இருக்கும் என்று இந்த படத்தை பார்த்தால், முதலில் இந்த படத்தில் நடிக்கவிருந்த ஹரிஷ் கல்யானுக்கு இருக்கிற கதை அறிவு கூட, கவினுக்கு இல்லை” என கடுமையாக விளாசியுள்ளார்.
Looks Kavin has a Huge Paid Promotion Team to influence a Below Average Movie.Sad State for Tamil Cinema.
— Spread Kamalism !!! (@SpreadKamalism) May 11, 2024