வெளியானது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்… முதலிடத்தில் அரியலூர்.!

Tamilnadu and Puducherry 10th Board Exam Result Released

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகியுள்ளது. தமிழக மாணவர்களின் தேர்வு முடிவுகளை tnresults.nic.in dge.tn.gov.in ஆகிய அரசு இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கை :

தமிழகத்தில் மொத்தம் 12,616 பள்ளிகளில் இருந்து 4,57,525 மாணவர்களும் , 4,52,498 மாணவிகளும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தமாக 9,10,024 பேர் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். அதே போல புதுச்சேரியில் 7,590 மாணவர்களும், 7,362 மாணவிகளும் என மொத்தம் 14,952 மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்.

பள்ளிகள் வாரியாக…

இதில் தமிழகத்தில் மொத்த தேர்ச்சி விகிதம் 91.55 சதவீதமாக உள்ளது. இதில் மாணவிகள் 94.53 சதவீதமும், மாணவர்கள் 88.58 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிகள் வாயிலாக மொத்தம் 4,105 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன . அதில், 87.90 சதவீதம் அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 91.77 சதவீதம் அரசு உதவி பெரும் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 97.43 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

100/100 மதிப்பெண்கள் :

தமிழில் 8 மாணவர்களும், ஆங்கிலத்தில் 415 மாணவர்களும், கணிதத்தில் 20,691 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 5,104 மாணவர்களும் , சமூக அறிவியலில் 4,428 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

முதலிடத்தில் அரியலூர் :

மாவட்ட வாரியாக அரியலூர் முதலிடம் பிடித்துள்ளது . அம்மாவட்டத்தின் தேர்ச்சி 97.31ஆக உள்ளது. சிவகங்கை தேர்ச்சி விகிதம் 97.02ஆக உள்ளது. ராமநாதபுரத்தின் தேர்ச்சி விகிதம் 96.24ஆக உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 96.24ஆக உள்ளது. திருச்சி மாவட்ட தேர்ச்சி விகிதம் 95.23ஆக உள்ளது.

புதுச்சேரி மாநிலம் :

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 289, அங்கு மொத்த தேர்ச்சி விகிதம் 89.14 சதவீதம் ஆகும். 100 சதவீதம் பெற்ற பள்ளிகளில் எண்ணிக்கை 107, புதுச்சேரி மட்டும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 90 ஆகும் , காரைக்கால் பகுதிகளில் 17 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன, புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமுள்ள 108 அரசு பள்ளிகளில் 8 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி கண்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்